Sign up to save your podcasts
Or

சென்னையை அடுத்த திருவொற்றியூர் என்னும் தலத்தில் அன்பர்களின் உதவியினால் சிவாச்சாரியார்களுடன் கலந்து சிவாகமங்களை நுட்பமாக ஆராய்ந்தறிந்தார்.
சிவஞானபாடியம்
மீண்டும் காஞ்சிபுரத்துக்கு வந்து தங்கியிருந்து சித்தாந்த சைவத் தத்துவ ஞானத்துக்குத் தமிழ்த் தலைமை நூலாக விளங்கும் சிவ ஞானபோதம் என்னும் நூலுக்குத் தமிழில் மாபாடியம் எழுதினார்.
அதனைத் திருவாவடுதுறைக்கு வந்து அப்பொழுது பீடாதிபதிகளாக வீற்றிருந்த பதினோராவது குருமகா சந்நிதானங்களாகிய சீர்வளர்சீர் பின்வேலப்பதேசிகர் முன்னிலையில் அரங்கேற்றம் செய்தார். அப்பொழுது இளையபட்டத்தில் சீர்வளர்சீர் அம்பலவாண தேசிகர் என்பவர் வீற்றிருந்தார். (இவரே மாதவச் சிவஞான முனிவரின் முதல் மாணாக்கராகிய கச்சியப்ப முனிவருக்கு ஆசாரியராக விளங்கியவர்).
By suresh babuசென்னையை அடுத்த திருவொற்றியூர் என்னும் தலத்தில் அன்பர்களின் உதவியினால் சிவாச்சாரியார்களுடன் கலந்து சிவாகமங்களை நுட்பமாக ஆராய்ந்தறிந்தார்.