Sign up to save your podcasts
Or

வைணவ சித்தாந்தத்துக்கு ஸ்ரீ இராமானுஜர் பாஷ்யக்காரர் என்றால் சைவ சித்தாந்தத்துக்கு சிவஞான முனிவர் பாஷ்யக்காரர். 'சிவஞான மாபாடியம் ஒரு பெருங் களஞ்சியம், தத்துவக் களஞ்சியம், தத்துவச் சுரங்கம், பெருஞ் சுரங்கம், தத்துவக் கடல், தத்துவ ஆராய்ச்சிக்கொரு கருவூலம், தமிழ்ச்செல்வம், கற்பகம், காமதேனு' என்று போற்றுகிறார் தமிழ்த் தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார்.
காஞ்சியில் வசித்த போது ஒரு முறை மடைப்பள்ளி சமையல்காரரான தவசிப் பிள்ளை என்பவர் இன்றைக்கு என்ன சமைப்பது என்று கேட்கச் சிவஞான முனிவர் அதற்கான பதிலை வெண்பாகவே கூறினாராம்.
சற்றே துவையல் அரைதம்பி பச்சடிவை
வற்றலே தேனும் வறுத்துவை - குற்றமில்லை
காயமிட்டுக் கீரைகடை கம்மென வேமிளகுக்
காயரைத்து வைப்பாய் கறி
'ஒரு துவையல், ஒரு பச்சடி, ஒரு வற்றல், கீரைக் கடைசல் ஆகியவற்றுடன் பெருங்காயம் சேர்த்தும், மிளகாய் அரைத்தும், கம் என்னும் வாசனையுடன் கறி செய்து வை' என்பதே இதன் பொருளாகும்.
By suresh babuவைணவ சித்தாந்தத்துக்கு ஸ்ரீ இராமானுஜர் பாஷ்யக்காரர் என்றால் சைவ சித்தாந்தத்துக்கு சிவஞான முனிவர் பாஷ்யக்காரர். 'சிவஞான மாபாடியம் ஒரு பெருங் களஞ்சியம், தத்துவக் களஞ்சியம், தத்துவச் சுரங்கம், பெருஞ் சுரங்கம், தத்துவக் கடல், தத்துவ ஆராய்ச்சிக்கொரு கருவூலம், தமிழ்ச்செல்வம், கற்பகம், காமதேனு' என்று போற்றுகிறார் தமிழ்த் தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார்.