Sign up to save your podcasts
Or

காஞ்சிபரத்தில் பிள்ளையார் பாளையம் என்னும் இடத்தில் திருவாவடுதுறை ஆதீனக் கிளை மடத்தில் தங்கியிருந்து காமாட்சியம்மனையும் திருவேகம்பநாதரையும் வழிபட்டுக் கொண்டிருந்தார். அங்கே கவிராட்சச கச்சியப்ப முனிவர் என்பவரும் அவருடனிருந்தார்.
காஞ்சிபுரத்தில் அன்பர்கள் பலருக்குச் சிவ நெறியை விளக்கி உரைத்தார். பலர் இவருக்கு அன்பராக – தொண்டராக – அமைந்தனர். மாணாக்கர் பலர் உருவாயினர். அன்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க காஞ்சிபுராணம் என்னும் நூலினை ஆக்கினார்.இப்புராணத்தில் அகத்திய முனிவர் இறைவனைத் தமிழ் கிளவியாகிய மந்திரங்களால் வழிபட்டார் எனப்பாடிவைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. (தழுவக் குழைந்த படலம் - 245) மற்றும் திருவேகம்பர் அந்தாதி, திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு, கச்சியானந்த ருத்திரேசர் பதிகம் போன்ற சிற்றிலக்கியங்களையும் ஆக்கினார்.
By suresh babuகாஞ்சிபரத்தில் பிள்ளையார் பாளையம் என்னும் இடத்தில் திருவாவடுதுறை ஆதீனக் கிளை மடத்தில் தங்கியிருந்து காமாட்சியம்மனையும் திருவேகம்பநாதரையும் வழிபட்டுக் கொண்டிருந்தார். அங்கே கவிராட்சச கச்சியப்ப முனிவர் என்பவரும் அவருடனிருந்தார்.