Sign up to save your podcasts
Or

அன்று மாலை வரையிலும் அப்பாடலை எவரும் பாடி முடிக்கவில்லை. இதனை அறிந்த ஏழை ஒருவன், அவ்வூரில் தங்கியிருந்த சுவாமிகளிடம் சென்று பாடலைப் பாடித் தரும்படி கேட்டார். சுவாமிகளும் ஏழையின் வறுமையை நீக்கும் பொருட்டுப் பாடலை எழுதிக் கொடுத்தார்.
ஏழை பாடலை வாங்கி அவையில் படித்துக் காட்டி பொன் முடிப்பை பெற்று மகிழ்ந்தார். சென்னை ஆவடிக்கு அருகிலுள்ள ஊர் கலசை. அங்கு உறையும் விநாயகர் செங்கழுநீர் விநாயகர். இக் கடவுள் மீது முனிவர் பாடிய நூல் ‘செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத் தமிழ். இந்நூலுக்கு ஒரு சிறப்புண்டு. விநாயகர் மீது பிள்ளைத் தமிழ் பாடிய மரபில் இந்நூலே முதல் நூலாகும்.
காஞ்சிபுரத்தில் சிவஞானமாபாடியம் சுவாமிகள் காஞ்சிபுரம் பயணம் மேற்கொண்டபோது அங்கு நெடுநாள் தங்கி, சிவஞான மாபாடியத்தை எழுதி முடித்தார். இந்நூல், இதுவரை தமிழிலும் வடமொழியிலும் எழுதப்பட்டுள்ள மாபாடியங்கள் அனைத்திலும் இது சிறந்த நூலாகும். இது மட்டுமின்றி காஞ்சி புராணம், சோமேசர் முதுமொழி வெண்பா, இலக்கண விளக்க சூறாவளி உள்ளிட்ட பல சிறந்த நூல்களை அருளியுள்ளார்.
சிவனின் திருவடி நிழலில் சைவ சித்தாந்தத்தை உணர்த்திய சிவஞான சுவாமிகள் ஒரு சித்திரை மாதம் ஆயிலிய நட்சத்திரத்தன்று சிவனது திருவடி நிழலில் கலந்து முக்தி பெற்றார். ஆண்டுதோறும் சித்திரை மாதம் ஆயிலியத்தன்று விக்கிரமசிங்கபுரம், காஞ்சிபுரம், திருவாவடுதுறை, சுசீந்திரம் ஆகிய ஊர்களில் இவரது குருபூஜை விழா திருவாவடுதுறை ஆதீனத்தால் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
By suresh babuஅன்று மாலை வரையிலும் அப்பாடலை எவரும் பாடி முடிக்கவில்லை. இதனை அறிந்த ஏழை ஒருவன், அவ்வூரில் தங்கியிருந்த சுவாமிகளிடம் சென்று பாடலைப் பாடித் தரும்படி கேட்டார். சுவாமிகளும் ஏழையின் வறுமையை நீக்கும் பொருட்டுப் பாடலை எழுதிக் கொடுத்தார்.