எழுநா

தேசிய இனப் பிரச்சினையும் இலங்கையின் இடதுசாரி இயக்கமும் - பகுதி 1 | ஆங்கில மூலம் : குமாரி ஜயவர்த்தன | தமிழில் : கந்தையா சண்முகலிங்கம்


Listen Later

முதலாம் உலகயுத்தம் ஆரம்பித்த வேலையில் ஐரோப்பாவில் சோஷலிஸ்டுகள் மத்தியில் தேசியவாத இனவாத உணர்வுகள் கிளப்பப்பட்டன. பெரும்பாலான சோஷலிசக் கட்சிகள் தத்தம் தந்தையர் நாட்டுக்காக (தாய் நாட்டிற்காக) போரில் ஈடுபடும்படி தொழிலாளர்களைக் கேட்டன.
மார்க்சிய இயக்கம் அதன் தொடக்க காலத்தில் இருந்தே தேசிய உணர்வு என்னும் விடயம் பற்றிக் கருத்துச் செலுத்தி வந்தது. ஐரோப்பாவில் தேசிய அரசுகள் (National States) உருவாகிக் கொண்டிருந்த போதும், காலனிகளினால் தேசிய விடுதலை இயக்கங்கள் எழுந்த போதும் தேசிய உணர்வு கிளர்ந்தெழுந்தது.
றோசா லக்சம்பேர்க் அவர்கள் நோக்கில் முதலாளிகளும், தொழிலாளர்களும் எந்த ஒரு விடயத்திலும் ஓரணியில் ஒன்று சேர முடியாது. போலிஷ் மக்களின் சுதந்திரம், சுயநிர்ணய உரிமை என்ற பெயரில் போலிஷ் தொழிலாளி வர்க்கம் போலிஷ் முதலாளிகளுடன் ஒன்றிணைய முடியாது என்பதே றோசா லக்சம்பேர்க் நிலைப்பாடு.
லெனின் றோசா லக்சம்பேர்க் கருத்துக்கு மாறாக தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தார். லக்சம்பேர்க் - லெனின் விவாதம் மார்க்சிய சிந்தனை வரலாற்றில் மிக முக்கியம் வாய்ந்தது.
1935 இல் இலங்கைச் சமசமாஜக்கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இன்றுவரை. கட்சியின் தேசிய இனப்பிரச்சினை பற்றிய உரையாடல்கள் தெளிவற்றனவாகவும் இருண்மை உடையனவாகவும் இருந்து வருவதையும் காணலாம்.
தமிழ் பூஷ்வா தலைவர்களும் இக்காலகட்டத்தில் தம் மக்களின் குறைகளை சிறுபான்மையினர் உரிமைகள்' (Minority Rights) என்ற வகையிலேயே முன்வைத்தார்கள் என்பது உண்மையாகும்.  

...more
View all episodesView all episodes
Download on the App Store

எழுநாBy Ezhuna