Jc Vivekraja.R

"திருக்குறள் தமிழ்ப்பணி" குப#1 -24.6.2021/1.30pm


Listen Later

✍️🗣️✍️🗣️✍️🗣️✍️🗣️✍️🗣️
*திருக்குறளின் சிறப்பியல்புகள்- Part-1*
⚜️திருக்குறள் எனக் குறிப்பிடப்படுவது, புகழ்பெற்ற தமிழ் மொழி இலக்கியமாகும்.
⚜️ *உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல்* எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது.
⚜️இதனை இயற்றியவரான திருவள்ளுவர், கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கும், கி.மு. ஒன்றாம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராக இன்றைய ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
⚜️திருக்குறள், சங்க இலக்கிய வகைப்பாட்டில், பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது.
⚜️இஃது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள், தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும், இசைவுடனும், நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. எதுவிதத்திலும், திருக்குறளை இயற்றியவர் பற்றியும், அது என்ன நூல் ? என்பது பற்றியும், *ஔவையாரால் இயற்றப்பட்டதாகக் கூறப்படும் "நல்வழி"* என்பதன் இறுதிப்பாட்டுப் பின்வருமாறு கூறுகிறது:
👇👇👇👇👇👇
⚜️ *நல்வழி:*
*"தேவர் குறளும் திரு நான்மறை முடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை திருவாசகமும் திருமூலர் சொல்லும் ஒருவாசகம் என்றுணர்".*
⚜️இதில் *'தேவர் குறள்'* எனக் கூறப்பட்டிருப்பது பற்றியும், குறள், திருநான்மறை, ஏனையவைகளும் *'ஒரு வாசகம்'* எனக் கூறப்பட்டிருப்பது பற்றியும், தமிழ் வித்தகர்கள் தெளிவான விளக்கத்தைக் கொடுக்காத நிலை தொடர்கிறது.
⚜️திருநான்மறை - *நான்கு வேதங்கள்*; மூவர் தமிழ் - *அப்பர், சம்பந்தர், சுந்தரர்* இயற்றியவை; முனிமொழி - அகத்தியர் அருளிய அகத்தியம்; திருமூலர் அருளிய திருமந்திரம்;
⚜️ இவை அனைத்தும், சமூக நலன் கருத்துக்களை உணர்த்துவன.
(தொகுப்பு)
*- சிஎஸ்கே & டீம்*
...more
View all episodesView all episodes
Download on the App Store

Jc Vivekraja.RBy Jc Vivek Raja.R