* உதகையில் நடைபெற்ற துணை வேந்தர்கள் மாநாட்டில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, நாம் கேட்பதாலோ, நேரில் சென்று தொழில் அதிபர்களுடன் கேட்பதாலோ முதலீடுகள் வராது. உலகளாவிய தொழில் முதலீடுகளை ஏற்பதற்கு சிறந்த சூழலை உருவாக்க வேண்டும் என்றார் * மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 11ம் தேதி வேலூர் வருகை தருகிறார் * ஒடிசா ரெயில் விபத்தில் மின்சாரம் தாக்கி 40 பயணிகள் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. * ஆளுநருக்கு தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன் கண்டனம் * சென்னை அண்ணா மேம்பாலம் அருகேயுள்ள, அரசுக்கு சொந்தமான 1000 கோடி மதிப்புள்ள 115 கிரவுண்ட் நிலம் மீட்பு * கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா 'வாடகை வீட்டில் வசிப்பவர்கள் உட்பட அனைத்து வீட்டு நுகர்வோருக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படும்' என தெரிவித்தார்.