Dinasuvadu Voice

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி விரைவில் ஊரக உள்ளாட்சி தேர்தல் : மாநில தேர்தல் ஆணையம்


Listen Later

உச்சநீதிமன்ற ஆணைப்படி தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித்தேர்தல் விரைவில்  அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இன்று ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கலந்து கொண்டன.

இந்நிலையில், ஆலோசனை கூட்டத்திற்கு பின், உச்சநீதிமன்ற ஆணைப்படி தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித்தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, இந்த கூட்டத்தில், திமுக சார்பாக வாக்குசாவடிகளை அதிகப்படுத்த வேண்டும் என்றும், அதிமுக சார்பாக வாக்குப்பதிவு நேரத்தை சற்று குறைக்க வேண்டும் என கோரிக்கை  முன்வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கருத்துக்கள் பரிசீலிக்கப்பட்டு, விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்றும், அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

...more
View all episodesView all episodes
Download on the App Store

Dinasuvadu VoiceBy Dinasuvadu Voice