(Voice: Arvind Swamy, Music: AR Rahman, Lyrics: Vairamuthu)உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும்மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே...தொண்ணூறு நிமிடங்கள் தொட்டணைத்த காலந்தான்,எண்ணூறு ஆண்டுகளாய் இதயத்தில் கலக்குதடி.பார்வையிலே சில நிமிடம்,பயத்தோடு சில நிமிடம்,கட்டியணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம் ,இலக்கணமே பாராமல் எல்லா இடங்களிலும்முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம்,உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும்மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே...எது நியாயம், எது பாவம்,இருவருக்கும் தோன்றவில்லை.அது இரவா, அது பகலா,அதுபற்றி அறியவில்லை.யார் தொடங்க , யார் முடிக்க,ஒரு வழியும் தோன்றவில்லை.இருவருமே தொடங்கிவிட்டோம்,இதுவரைக்கும் கேள்வியில்லை..!அச்சம் கலைந்தேன்,ஆசையினை நீ அணிந்தாய்.ஆடை கலைந்தேன், வெட்கத்தை நீ அணிந்தாய்.கண்ட திருக்கோலம்கனவாக மறைந்தாலும்,கடைசிலே அழுத கண்ணீர்கையில் இன்று முட்டுதடி.உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும்மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே...