Solratha sollitom| Hello Vikatan

ஊழலை எதிர்க்கும் மோடி ...மோசடி வழக்குகளில் பா.ஜ.க நிர்வாகிகள்...சிக்கலில் அண்ணாமலை! | Solratha Sollitom-27/06/2023


Listen Later

* நாட்டு நலனுக்காகவும், சந்ததிகள் முன்னேற்றத்திற்காவும் மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும். எதிர்க்கட்சிகளின் வாரிசு அரசியல் நாட்டுக்கு உகந்தது அல்ல. ஊழல்கள் பிடிபட்டதால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை எதிர்க்கின்றன- மோடி

* பக்தர்கள் தரிசனத்துக்கு சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் தடை

* அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

தீட்சிதர்கள் என்றாலே பிரச்சினைதான். ஒட்டுமொத்த பக்தர்களும் கோயிலை இந்து சமய அறநிலையத்துறை நடத்த வேண்டும் என நினைக்கிறார்கள். ஆவணங்களை திரட்டி அதற்கான பணிகள் படிப்படியாக நடைபெறும் என்றார்.


* டெல்லியில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- "தமிழக காங்.தலைவர் பதவிக்கு யாரை நியமித்தாலும் மகிழ்ச்சி தான். காங்கிரஸ் மாநில தலைவராக எனக்கு உரிய பணியை செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்"

* ஆருத்ரா கோல்டு டிரேடிங் மோசடி விவகாரத்தில் நடிகர் ரூசோவிடம் நடிகர் ஆர்.கே.சுரேஷ் ரூ.15 கோடி வாங்கிய தகவல் வெளியாகியுள்ளது.

* நிலம் வாங்கித் தந்து, அதிக லாபம் பெற்றுத் தருவதாக சொல்லி மக்களிடம் பல ஆயிரம் கோடி ரூபாயை வசூல் செய்ததாக பா.ஜ.க நிர்வாகி மீது புகார்

* அனைத்துச்சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் - உறுதி செய்த உயர்நீதிமன்றம்


Credits : Script & Hosts : Srinivasan & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

...more
View all episodesView all episodes
Download on the App Store

Solratha sollitom| Hello VikatanBy Hello Vikatan