பெயருக்கு ஏற்பது கோலிவுட்டின் வெற்றி இயக்குனராகவே பார்க்கக்கூடிய இயக்குனர் தான் வெற்றிமாறன். இவருடைய படங்களில் இளம் நடிகர்கள் மட்டுமல்ல 5 டாப் இயக்குனர்களும் படம் பிடித்து விரும்பி நடித்துள்ளனர்.அமீர்: பாலாவின் உதவி இயக்குனராக பணிபுரிந்து அதன் பிறகு மௌனம் பேசியதே என்ற படத்தில் முதன்முதலாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குனர் அமீர். அமீர் வடசென்னை படத்தில் ராஜன் என்ற கதாபாத்திரத்தில் மிக கச்சிதமாக பொருந்தி நடித்திருப்பார். இதில் ஜோடியாக நடித்த ஆண்ட்ரியாவிற்கு கூட ராஜன் பொண்டாட்டி என்று அமீரின் கதாபாத்திரத்தை தான் அழுத்தி சொல்கின்றனர். அந்த அளவிற்கு ராஜன் ஆகவே அமீர் இதில் வாழ்ந்திருப்பார்.வேல்ராஜ்: திரை உலகின் தவிர்க்க முடியாத ஒளிப்பதிவாளராக திகழ்ந்தவர் தான் வேல்ராஜ். இவர் வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம், வட சென்னை போன்ற படங்களில் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.ராஜீவ் மேனன்: மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் ராஜீவ் மோகன். இவர் சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தில் தலைமை செயலாளராக சுப்பிரமணியன் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி நடித்திருப்பார்.ராமதாஸ்: சிறந்த எழுத்தாளருமான ராமதாஸ் பின்னாளில் நடிகராகவும் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் வெற்றிமாறன் இயக்கிய விசாரணை படத்தில் எதார்த்தமான போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார்.சரவண சுப்பையா: சிட்டிசன், ஏ பி சி டி போன்ற படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகி, அதன் பிறகு நடிகராக ஏகப்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தில் கலெக்டராக நடித்து அசத்தியிருப்பார்.