Solratha sollitom| Hello Vikatan

விஜயை எதிர்க்கும் விஜயகாந்த் கட்சி | Solratha Sollitom-24/07/2023


Listen Later

* கவர்னர் என்றால் நிறைய வேலைகள் இருக்கும் என்ற மாயை, பொதுமக்கள் மத்தியில் உள்ளது. எனக்கு எவ்வளவு வேலைகள் உள்ளன; நான் எவ்வளவு செய்கிறேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும்... எனக்கு அதிக வேலைகள் இல்லை. - ஆளுநர் ரவி

* ஞானவாபி மசூதியில் 26-ந்தேதி வரை தொல்லியல்துறை ஆய்வு நடத்தக்கூடாது என உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு, மசூதி கமிட்டி இதுபற்றி மேல்முறையீடு செய்ய ஐகோர்ட்டுக்கு செல்லலாம் என்றும் தெரிவித்து உள்ளது. 

* நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் மக்களவை மற்றும் மாநிலங்களவை இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய நிலையில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்கவேண்டும் என எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பின. இதனால் இரு அவைகளும் நண்பகல் 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

* மணிப்பூர் பா.ஜ.க எம்.எல்.ஏ பாவோலியன்லால் ஹாக்கிப் (Paolienlal Haokip) மணிப்பூரில் நடக்கும் இந்தக் கலவரத்துக்கு மணிப்பூரில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க அரசுதான் காரணம் என `அதிர்ச்சி' கிளப்பியிருக்கிறார்.

இடையே அரசு நடுநிலையாக இருந்திருந்தால்... இந்தப் பெரும் உயிர் சேத வன்முறை மோதலைத் தவிர்க்கலாம்.

* விழுப்புரம் தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவராக இருப்பவர் கலிவரதன். இவர் கட்சி சார்பில் விக்கிரவாண்டியில் நேற்று நடந்த பொது கூட்டத்தில் கலந்து கொண்டார். அவர் கூட்டத்தில் பேசும்போது, முன்னாள் முதல்-மந்திரி கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி அவதூறாக பேசினார் என குற்றச்சாட்டு எழுந்தது. 

* தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நீதிமன்ற வளாகங்களில் இனி திருவள்ளுவர், மற்றும் மகாத்மா காந்தி ஆகியோரின் உருவப்படங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் என்றும், மற்ற தலைவர்களின் படங்கள் அகற்றப்பட வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டின் பதிவுத்துறை அனைத்து நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது.

* பிரேமலதா :- தே.மு.தி.க. இந்த நிமிடம் வரை யாருடனும் கூட்டணியில் இல்லை. விஜயகாந்த் போல் யாரும் வர முடியாது. அவருடன் யாரையும் ஒப்பிட முடியாது. மக்களுக்கு அவரைப் போல் யாரும் சேவை செய்ய முடியாது. விஜய் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியதை வரவேற்கிறேன். அரசியல் வேறு, சினிமா வேறு... விஜயகாந்தைப் போல் விஜய் வர முடியாது. கேப்டன் மாதிரி என்று நினைத்தால் அதன் விளைவுகள் மோசமானதாக இருக்கும். அரசியலுக்கு வருவரா இல்லையா என்பது விஜய் தான் தெளிவுபடுத்தணும் என்று கூறினார்.

* பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற மாட்டேன் என ஓபிஎஸ் சொல்கிறாரே.. என்ற கேள்விக்கு பதிலளித்த சசிகலா, "அதிமுகவின் அனைத்து அணிகளையும் ஒற்றுமைப்படுத்துவதே என்னுடைய பணி. பாஜகவுடன் கூட்டணி தொடரும் என ஓபிஎஸ் கூறியது அவரது தனிப்பட்ட முடிவு. அதில் நான் எவ்வாறு தலையிட முடியும்?" என்றார்.

...more
View all episodesView all episodes
Download on the App Store

Solratha sollitom| Hello VikatanBy Hello Vikatan