வன்முறை (Violence) என்பதை உலக சுகாதார அமைப்பு கீழ்வருமாறு வரையறை செய்துள்ளது: ஒரு நபர், குழு அல்லது சமூகத்திற்கெதிராக காயம், மரணம், உளவியல் தீங்கு, வளர்ச்சியின்மை அல்லது இழப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும்படியாக அல்லது இவை நிகழ அதிகம் வாய்ப்புகளை உருவாக்கும்படியாக, உண்மையாகவோ அல்லது அச்சுறுத்தும்படியாகவோ உடல் வலிமை, அதிகாரத்தை வேண்டுமென்றே பயன்படுத்துவது வன்முறையாகும். வன்முறைகளை அரசியல், மதம், சாதி, குடும்பம், பாலியல் சார்ந்தவகைகளாக வகைப்படுத்தலாம்.