கி.பி 1657 ம் ஆண்டு ஷாஜகான் நோயினால் படுத்த படுக்கையானார். அரசர் தரிசனம் கிடைக்காததால் அரசர் இறந்துவிட்டதாக வதந்தி பரவியது. ஔரங்கசீப்பின் சகோதரர் தாராசிகாவும் ஷாஜஹானின் பெயரால் சில மோசடிகளில் இறங்கியதும், எதிரிகள் ஆட்சியை கைப்பற்ற தீவிர முயற்சிகள் நடைபெறுவதையும் அறிந்த ஔரங்கசீப் தன் சகோதரர் தாராசிகாவின் மேல் படையெடுத்தார். இந்தசெய்தி அறிந்த தாராசிகாவும் ஷாஜகானும் படையை அனுப்பினார்கள். ஆனால் விதி ஔரங்கசீப்பிற்கு ஆசி வழங்கியது. மிக மோசமாக தோல்வியை சந்தித்தது தில்லி படை. ஆக்ராவை கைப்பற்றியவுடன் சிறிதும் தாமதிக்காமல் ஔரங்கசீப்பின் படை தில்லி விரைந்தது. தில்லியில் தாரசிகாவின் படையை வெற்றி கொண்டார். தாராசிகா சிந்து பகுதியை நோக்கி பின்வாங்கினார். ஷாஜகான் சிறைபிடிக்கப்பட்டார். தனது மற்ற இரு சகோதரர்களான சுஜாவையும் முராத்தையும் முழுவதுமாக வெற்றிகொண்டு ஆலம்கீர் முடிசூட்டிக்கொண்டார்.