VEDHAGAMAM DOT COM

009. Book of Romans Ch 1:28-32 The Sign of Ungodliness Tamil Christian Message 2021


Listen Later

வ.28

தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால்,-> தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.

இந்த வேத வசனம் குறிப்பிடுகிற தகாதவைகள் தான் உலகத்தின் பிரச்சனை என்பது பலருடைய எண்ணம். ஆனால் தேவனை அறியும் அறிவை பற்றிக்கொண்டிருக்க மனமில்லாமல் இருப்பதுதான் தகாதவைகளுக்கு காரணம்.  எதை செய்ய வேண்டுமோ அதை செய்ய மனிதர்களுக்கு விருப்பம் இல்லாததினால் எதை செய்யக்கூடாதோ அவைகளை செய்யும்படி  கடவுள் மனிதர்களை விட்டுவிட்டார். கடவுளைப்பற்றிய சிறிய ஒரு வெளிச்சம் எல்லா மனிதர்களுக்கும் கொடுக்கப்படுகிறது. ஆனால் அதை பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லை. தேவனை அறியும் அறிவை பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லை. உண்மையான கடவுளை பற்றி அறிய அவர்கள் விரும்புவதில்லை. விளைவு, தகாதவைகளை செய்யும்படி தேவன் அவர்களை கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார். அவசியமானதை பற்றிக்கொண்டிருக்க மனிதர்களுக்கு விருப்பமில்லை. எனவே அவசியமில்லதவைகளை செய்துகொண்டிருக்க மனிதர்களை விட்டுவிட்டார்.

...more
View all episodesView all episodes
Download on the App Store

VEDHAGAMAM DOT COMBy VEDHAGAMAM DOT COM