Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
To organize Tamil Christians who look for biblical preaching and teaching. You can visit vedhagamam.com to read good Tamil articles. Contact [email protected] for any questions and clarifica... more
FAQs about VEDHAGAMAM DOT COM:How many episodes does VEDHAGAMAM DOT COM have?The podcast currently has 23 episodes available.
October 29, 2021023. Book of Romans Ch 9 God's Chosen People will Get God'd Rightousness Tamil Christian Message 2021ரோமர் 9 எந்த இனத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் தேவனால் அழைக்கப்பட்டவர்களே விசுவாசத்தினால் உண்டாகும் நீதியை பெறுகிறார்கள்...more44minPlay
July 05, 2021022. Book of Romans 8:18-39 Assurance of Glory while sufferings of Faith Tamil Christian Message 202129 ஆவது வசனத்திலிருந்து அதை தொடர்ந்து வாசிக்கும்போது ஒரு விசுவாசியின் வாழ்வில் கடவுளின் முடிவடைந்த திட்டம் அறிவிக்கப்படுகிறது. நான் ஏன் அதை முடிவடைந்த திட்டம் என்று சொல்லுகிறேன் என்றால் அந்த பத்தியில் சொல்லப்பட்டிருக்கிற அனைத்தும் கடந்த காலத்தில் (Past Tence) சொல்லப்பட்டிருக்கிறது. கடவுள் தமது பிள்ளைகளை முன்னறிந்தார் - முன்குறித்தார்-அழைத்தார்-நீதிமானாக்கினார்-மகிமைப்படுத்தினார். நாம் பொதுவாக கடவுள் நம்மை முன்னறித்தது, முன்குறித்தது, அழைத்தது, நீதிமானாக்கியது எல்லாம் கடந்த காலம். ஆனால் மகிமைப்படுத்துவது இனிமேல் தான் நிகழப்போகிற காரியம் என்று நினைக்கிறோம். ஆனால் வேதாகமம் தவறாதன்மை உடையது, பிழையற்றது என்பதை உணருவோமானால் ஒரு விசுவாசியின் மகிமைப்படுத்தப்படுதலும் முடிவடைந்துவிட்ட ஒரு விஷயம் என்பதை ஏற்பதில் ஒரு சிக்கலும் இருக்காது. அதாவது கடவுளின் பார்வையில் ஒரு விசுவாசியின் மகிமைப்படுத்தப்படுதல் என்பது ஏற்கனவே முடிந்துவிட்ட ஒரு காரியம்.இது எப்படி சாத்தியம்? ஏனென்றால் நம்மை அழைத்தவர் கடவுள்....more36minPlay
June 28, 2021021. Book of Romans 8:12-17 How to Face the Sufferings in Christian Life Tamil Christian Message 2021எந்த ஒரு உபத்திரவமும் இல்லாத சுமூகமான ஒரு கிறிஸ்தவ வாழ்வு இல்லை. இந்த நாட்களில் பிரச்சனையே இல்லாத கிறிஸ்தவ வாழ்வே பிரசங்கிகப்படுகிறது. ஒருவன் உண்மையான கிறிஸ்தவனாக இருப்பானானால் அவனுக்கு எந்த பிரச்சனையுமே இருக்காது என்பது தவறானதும் வேதாகமத்திற்கு முரணானதுமான போதனை. பிரச்சனையே இல்லாத வாழ்வு என்கிற மாயையான எண்ணத்தை விட்டு முதலாவது நாம் வெளியே வரவேண்டும். எதார்த்தமான கிறிஸ்தவ வாழ்வை எதிகொண்டு பழகவேண்டும்.இரண்டாவது அவசியமான துன்பங்களை நாம் ஏற்க பழகவேண்டும். இந்த உலகில் யதார்த்தமாக கிறிஸ்தவ வாழ்வு வாழுகிறோமா இல்லையா என்பது அநித்தியன இன்பங்களுக்கும் நித்திய இன்பங்களுக்கும் இடையிலான தெரிந்தெடுப்பே என்பதை மனதில் கொள்ளவேண்டும். நித்தியமான இன்பத்தை தெரிந்தெடுத்தல் என்பது பல வேளைகளில் அநித்தியமான இன்பங்களை புறக்கணிப்பதே....more38minPlay
June 13, 2021020. Book of Romans 8:1-13 Death in Flesh but Life in Spirit Tamil Christian Message 2021கிறிஸ்து இயேசுவுக்கு உட்பட்டவர்களாயிருப்பதும், மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடப்பதும் இருவேறு நிலை அல்ல. இரண்டும் ஒரே நிலையை (நபரை) குறிப்பதாகும். அதாவது கிறிஸ்து இயேசுவுக்கு உட்பட்டவர்களாயிருப்பதே மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடப்பதாகும். மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடப்பது அடிப்படையில் செயல் அல்ல. இது ஒரு விசுவாசியின் நிலை அடிப்படையிலான உண்மை. இதையும் நாம் விசுவாசிக்க வேண்டும் என்பதே ஆண்டவரின் விருப்பம். அதையும் இதே அதிகாரத்தில் பவுல் தெளிவுபடுத்துகிறார்.மாம்சத்தின் படி வாழ்தல் என்பது மாம்சத்தின் விருப்பத்தை நிறைவேறுதல் என்கிற பொருளை மட்டும் உடையதாக இராமல் மாசத்தின் கட்டுப்பாட்டில் வாழ்தல் என்கிற பொருளையும் உடையதாக இருக்கிறது. அதே விதமாகத்தான் ஆவியின் படி வாழ்தல் என்பது ஆவியானவரின் விருப்பத்தை நிறைவேறுதல் என்பது மட்டுமல்ல, ஆவியானவரின் கட்டுப்பாட்டில் வாழ்தல் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.கிறிஸ்தவர்களான நாம் ஏற்கனவே ஆவிக்குட்பட்டவர்களாக இருக்கிறோம். எனவே மாம்சத்தின்படி அல்ல ஆவியிபடி வாழ்வதே நமது அழைப்பு....more38minPlay
May 31, 2021019. Book of Romans Ch 7 Believers are Dead to The Law and United with Christ Tamil Christian Messages 2021பவுல் இந்த இடத்தில் மிக அழகான ஒரு ஒப்புமையை பயன்படுத்துகிறார். இங்கே நியாயப்பிரமாணத்தை கணவனாகவும் மனிதர்களை மனைவியாகவும் சித்தரிக்கிறார். மனிதர்கள் சட்ட விதிகளின்படி நியாயப்பிரமாணத்துக்கு உட்பட்டிருக்கிறார்கள். ஆனால் கிறிஸ்தவர்களான நம்முடைய நிலை மாறிவிட்டது. நாம் ஏற்கனவே கற்றுக்கொண்டது போல விசுவாசிகளான நாம் கிறிஸ்துவுக்குள் மரித்து உயிர்த்தெழுந்திருக்கிறோம். அந்த உண்மையின் படி கிறிஸ்துவின் சரீரத்தைனாலே நாம் நியாயப்பிரமாணத்துக்கு மரித்து கிறிஸ்து எனும் வேறொருவருக்கனவர்களாக ஆகியிருக்கிறோம். வேதாகமத்தின் அடிப்படையில் மரணம் என்பது பிரிவு ஜீவன் என்பது உறவு / இணைப்பு என்பதை நாம் பார்த்திருக்கிறோம். அந்த அடிப்படையில் நாம் நாம் நியாயப்பிரமாணத்திலிருந்து பிரிக்கப்பட்டு கிறிஸ்துவுடன் உறவுள்ளவர்களாக இணைக்கப்பட்டவர்களாக இருக்கிறோம்....more40minPlay
May 25, 2021018. Book of Romans Ch 6:14-23 Sin Cannot Overcome You Tamil Christian Messages 2021கிருபைக்கு கீழ்பட்டிருக்கிற உங்களை பாவம் இனி மேற்கொள்ள முடியாது என்று பவுல் எழுதுகிறார். நாம் தொடர்ந்து பார்த்துவருகிறபடி இந்த இடத்தில் பாவம் என்பதைப்பற்றிய புரிதல் மிக மிக அவசியமானது. இந்த வசனத்தில் பாவம் என்று பவுல் எதை குறிப்பிடுகிறார்? நிலையையா? செயலையா? நம்முடைய பழைய பாவ நிலையை குறிப்பிடுகிறார். நாம் செய்யும் பாவ செயல்களை அல்ல.இந்த வசனத்தில் பவுல் ஒருவேளை பாவ செயலை குறிப்பிடுவாரானால், இரட்சிக்கப்பட்டவர்களால் பாவம் செய்யவே முடியாது, பாவ செயல்களுக்கு இரட்சிக்கப்பட்டவர்களை மேற்கொள்ள வல்லமை கிடையாது என்கிற பொருள் வருகிறது. அது தவறான புரிதல் என்பது உடனடியாக நமக்கு புரியும்....more41minPlay
May 12, 2021017. Book of Romans Ch 6:1-13 Believers are dead to Sin and Alive to God in Christ Tamil Christian Messages 2021கிறிஸ்துவுக்குள் நாம் பாவத்திற்கு மரித்ததோம். கிறிஸ்துபாவத்திற்காகவும் (for) மரித்தார் (செ யல்) பாவத்திற்கும் (to)மரித்தார் (நிலை ). மனிதர்களாகிய நம்மால் பாவத்திற்காகமரிக்க முடியாது. அதை கிறிஸ்து மட்டுமே செ ய்ய முடியும்.எனவே இந்த பகுதி நாம் கிறிஸ்துவுக்குள் நமது பாவநிலை க்கு மரித்திருக்கிற ோம் என்பதை யேசுட்டிக்காட்டுகிறது.6:9-11 கிறிஸ்து பாவத்திற்கு (to) மரித்து தேவனுக்கு (to)பிழைத்திருக்கிறார். இனி மரிக்க மாட்டார். எனவே நீங்களும்உங்களை பாவத்திற்கு (to) மரித்தவர்களாகவும்கிறிஸ்துவுக்குள் தேவனுக்கு (to)பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கோள்ளுங்கள்....more49minPlay
May 05, 2021016. Book of Romans Ch 5:12-21 Assurance of Salvation-3 Tamil Christian Message 2021நியாயப்பிரமாணத்தின் தன்மையை குறித்து பவுல் முந்தைய அதிகாரங்களிலேயே எழுதியிருக்கிறார். நியாயப்பிரமாணத்தின் நோக்கம் என்ன? பாவத்தை வறையரை செய்வது. பாவத்தை சுட்டிக்காட்டுவது. மோசே மூலமாகத்தான் நியாயப்பிரமாணம் இஸ்ரவேல் மக்களுக்கு கொடுக்கப்பட்டது. அப்படியானால் மோசேயின் காலகட்டத்திற்கு முன்னால் வாழ்ந்த மக்களிடத்தில் பாவம் இல்லையா? அவர்களிடத்திலும் பாவம் இருந்தது. ஆனால் எது பாவம் என வறையரை செய்யும் நியாயப்பிரமாணம் அவர்களிடத்தில் இல்லை. பாவத்தை குறித்த தெளிவான புரிதல் இல்லை. எனவே அவர்கள் பாவம் எண்ணப்படவில்லை.கடவுளின் பார்வையில் பாவம் என்பது எப்போதுமே பாவம்தான். ஆனால் எது பாவம் என்பதை அவர் வறையரை செய்து நமக்கு கொடுக்காதவரை நமக்கு பாவத்தை பற்றி தெரியாது....more28minPlay
April 28, 2021015. Book of Romans Ch 5:6-11 Assurance of Salvation-2 Tamil Christian Message 2021நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்ட-பின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.நாம் முன்பு தேவனுக்கு சத்துருக்களாக இருந்தோம். அதுதான் பாவ நிலையில் நமக்கும் கடவுளுக்கும் இடையிலான உறவு. இப்போது கிறிஸ்துவின் மரணத்தால் கடவுளுடன் ஒப்புறவாக்கப்பட்டிருக்கிறோம். இது நீதிமான்களாக்கப்பட்டிருக்கிற நமது புதிய நிலையின் அடிப்படையிலான உறவு. முன்பு கடவுளுக்கு எதிரிகளாக இருந்தோம். இப்போது கடவுளுக்கு நண்பர்களாக இருக்கிறோம். முன்பு நமக்கு கடவுளுக்கும் ஒட்டுறவில்லை. இப்போது கட்வுளுடன் ஐக்கியத்தில் இருக்கிறோம்.முன்பு நம் பான நிலையில் கடவுளுக்கு எதிரிகளாக இருக்கும்போதே அவருடைய குமாரனின் “மரணத்தின்” மூலமாய் அவருடன் ஒப்புறவாக்கப்பட்டோமானால், இப்போது ஒப்புறவான பின், சமாதானம் உண்டாயிருக்கும் நிலையில், உயிர்த்தெழுந்துவிட்ட கிறிஸ்துவின் “ஜீவனாலே” நாம் இரட்சிக்கப்படுவது எவ்வளவு நிச்சயம்!இந்த பகுதியில் அப்போஸ்தலனாகிய பவுல் தெளிவாக சொல்வது இதைத்தான். வெறுக்கப்படும் நிலையில் இருந்தபோதே இரட்சித்தாரே, நேசிக்கப்படும் நிலையில் அவர் நம்மை இரட்சிப்பது எவ்வளவு நிச்சயம்....more31minPlay
April 28, 2021014. Book of Romans Ch 5:1-5 Assurance of Salvation-1 Tamil Christian Message 2021நாம் விசுவாசத்தினால் இப்போது நீதிமான்களாக ஆக்கப்பட்டிருக்கிற படியால் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் கடவுளிடத்தில் சமாதானம் உள்ளவர்களாக இருக்கிறோம். இரட்சிக்கப்பட்டவர்கள் முதலாவது உணர்ந்துகொள்ள வேண்டிய உண்மை இதுதான். கிறிஸ்து மூலமாய் நமக்கும் கடவுளுக்கும் இடையில் சமாதானம் உண்டாயிருக்கிறது. இந்த சமாதானம் எப்படி உண்டாயிருக்கிறது? நாம் கிருபையினால் விசுவாசத்தைக்கொண்டு நீதிமான்களாக ஆக்கப்பட்டிருக்கிறபடியால் உண்டாயிருக்கிறது. நாம் இயேசு கிறிஸ்து மூலமாக தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.ஏசாயா 9:6 இயேசு கிறிஸ்துவை பற்றிய தீர்க்கதரிசனம்நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.சமாதானப்பிரபு - அது அவருடைய நாமம். சமாதானம் செய்வது கிறிஸ்துவின் தன்மை. சமாதானம் செய்யும்படி கிறிஸ்து வந்தார்.நாம் பாவிகளாக இருந்தோம். எனவே கடவுளுக்கு எதிரிகளாக இருந்தோம். அந்த பாவத்திற்கான தீர்வாக கிறிஸ்து மரித்து உயிர்த்தெழுந்தார். அதை நாம் நம்பினால் நீதிமான்களாக்கப்படுகிறோம். அப்படி நீதிமான்களாக்கப் பட்டிருப்போமானால், இனி நாம் தேவனுக்கு எதிரிகள் அல்ல. அவரிடத்தில் கிறிஸ்து மூலமாய் சமாதானம் பெற்றிருக்கிறோம்....more38minPlay
FAQs about VEDHAGAMAM DOT COM:How many episodes does VEDHAGAMAM DOT COM have?The podcast currently has 23 episodes available.