Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
To organize Tamil Christians who look for biblical preaching and teaching. You can visit vedhagamam.com to read good Tamil articles. Contact [email protected] for any questions and clarifica... more
FAQs about VEDHAGAMAM DOT COM:How many episodes does VEDHAGAMAM DOT COM have?The podcast currently has 23 episodes available.
April 19, 2021013. Book of Romans Ch 4 We are Justified by faith alone like Abraham Tamil Christian Message 2021நாம் விசுவாசத்தினால் இப்போது நீதிமான்களாக ஆக்கப்பட்டிருக்கிற படியால் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் கடவுளிடத்தில் சமாதானம் உள்ளவர்களாக இருக்கிறோம். இரட்சிக்கப்பட்டவர்கள் முதலாவது உணர்ந்துகொள்ள வேண்டிய உண்மை இதுதான். கிறிஸ்து மூலமாய் நமக்கும் கடவுளுக்கும் இடையில் சமாதானம் உண்டாயிருக்கிறது. இந்த சமாதானம் எப்படி உண்டாயிருக்கிறது? நாம் கிருபையினால் விசுவாசத்தைக்கொண்டு நீதிமான்களாக ஆக்கப்பட்டிருக்கிறபடியால் உண்டாயிருக்கிறது. நாம் இயேசு கிறிஸ்து மூலமாக தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்....more37minPlay
April 13, 2021012. Book of Romans Ch 3:5-32 Not Law but Christ Justifies Tamil Christian Message 2021ரோமர் 3:21-2221 இப்படியிருக்க, நியாயப்பிரமாணமில்லாமல் தேவநீதி வெளியாக்கப்பட்டிருக்கிறது; அதைக்குறித்து நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியிடுகிறது.22 அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை.பவுல் தொடர்ந்து நியாயப்பிரமாணத்தை பெற்றிருந்த மக்களிடமே பேசிக்கொண்டிருக்கிறார். நியாயப்பிரமாணம் ஒருவரையும் நீதிமானாக்காது என்பதால், நியாயப்பிரமாணத்தால் தன்னை நீதிமானாக்கிக்கொள்ள ஒருவாராலும் கூடாது என்பதால் நியாயப்பிரமாணமில்லாமல் தேவநீதி வெளியாக்கப்பட்டிருக்கிறது. நியாயப்பிரமாணம் இல்லாமல், அல்லது நியாயப்பிரமாணத்துக்கு அப்பாற்பட்டு தேவநீதி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.அது இயேசு-கிறிஸ்துவை-ப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை....more32minPlay
April 13, 2021011. Book of Romans Ch 3:1-4 No man, God alone is Truthful Tamil Christian Message 2021யூதர்கள் மூலமாக கடவுளின் வார்த்தை கொடுக்கப்பட்டது என்பதை சிலர் விசுவாசிக்க வில்லை என்பதனால், அது கடவுளின் உண்மைதன்மையை பாதிக்குமா? இல்லை. கடவுள் ஆபிரகாமை தெரிந்தெடுத்த நோக்கங்களில் ஒன்று ஆபிரகாமின் வழித்தோன்றல்களை ஒரு இனமாக உருவாக்கி அவர்கள் மூலமாக உலகிற்கு தன்னை வெளிப்படுத்துவது. உண்மையான கடவுளைப்பற்றி உலகிற்கு சாட்சி பகரக்கூடிய அழைப்பு அவர்களுக்கு இருந்தது. ஆனால் யூதர்களுடைய சரித்திரத்தை வேதாகமத்தில் கவனித்து பார்த்தால் அவர்கள் ஒருபோதும் கடவுளுக்கு உண்மையாக இருந்தது இல்லை. எப்போதும் கடவுளை புறக்கணித்துக்கொண்டே இருந்தனர். அவர்கள் உண்மையற்றவர்களாக போய்விட்டார்கள் என்பதனால் கடவுள் தன்னுடைய உண்மைத்தன்மையிலிருந்து பின்வாங்கி விட்டாரா? அதுதான் இல்லை. கடவுள் ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்குத்தத்தத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்கவில்லை. யூதர்களுடைய புறக்கணிப்புக்கு மத்தியிலும் யூதர்களுடைய அவிசுவாசத்துக்கு மத்தியிலும் யூதர்களின் தொடர் உண்மை தன்மை இன்ன்மையின் மத்தியிலும் கடவுள் உண்மையுள்ளவராகவே இருந்தார். யூதர்கள் மூலமாகத்தான் தன்னுடைய வார்த்தையை உலகிற்கு கொடுப்பேன் என்று தீர்மானித்த நிலையிலிருந்து மாறவே இல்லை....more28minPlay
April 13, 2021010. Book of Romans Ch 2:1-29 Good People are also Sinners Tamil Christian Message 2021ரோமர் 2:1ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி, போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத்தீர்க்கிறாய்.பவுல் இந்த அதிகாரத்தில் கடவுளின் ஏழு விதமான நியாத்தீர்ப்புகளை குறித்து எழுதுகிறார். கடவுளின் கோபாக்கினை நாள் என்று அழைக்கப்படக்கூடிய அந்த நாளிலே, கடவுளின் உக்கிர கோபம் ஊற்றப்படும் நாளிலே “நல்லவர்கள்” கூட தப்பமுடியாது. கடவுள் மனுக்குலத்தை நியாயம் தீர்க்கும் ஏழு வழிகள்....more1h 1minPlay
April 13, 2021009. Book of Romans Ch 1:28-32 The Sign of Ungodliness Tamil Christian Message 2021வ.28தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால்,-> தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.இந்த வேத வசனம் குறிப்பிடுகிற தகாதவைகள் தான் உலகத்தின் பிரச்சனை என்பது பலருடைய எண்ணம். ஆனால் தேவனை அறியும் அறிவை பற்றிக்கொண்டிருக்க மனமில்லாமல் இருப்பதுதான் தகாதவைகளுக்கு காரணம். எதை செய்ய வேண்டுமோ அதை செய்ய மனிதர்களுக்கு விருப்பம் இல்லாததினால் எதை செய்யக்கூடாதோ அவைகளை செய்யும்படி கடவுள் மனிதர்களை விட்டுவிட்டார். கடவுளைப்பற்றிய சிறிய ஒரு வெளிச்சம் எல்லா மனிதர்களுக்கும் கொடுக்கப்படுகிறது. ஆனால் அதை பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லை. தேவனை அறியும் அறிவை பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லை. உண்மையான கடவுளை பற்றி அறிய அவர்கள் விரும்புவதில்லை. விளைவு, தகாதவைகளை செய்யும்படி தேவன் அவர்களை கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார். அவசியமானதை பற்றிக்கொண்டிருக்க மனிதர்களுக்கு விருப்பமில்லை. எனவே அவசியமில்லதவைகளை செய்துகொண்டிருக்க மனிதர்களை விட்டுவிட்டார்....more42minPlay
April 11, 2021008. Book of Romans Ch 1:18-27 Who am I? Biblical answer Tamil Christian Message 2021அடிப்படையில் மனிதர்களாகிய நாம் அவபக்தியும் அநியாயமும் நிறைந்தவர்கள். இந்த இரண்டு வார்த்தையை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். அவ-பக்தி, அ-நியாயம். பக்தியின் எதிர்பதம் அவ-பக்தி. நியாயத்தின் எதிர்பதம் அ-நியாயம். இந்த அவபக்தி மற்றும் அநியாயத்தினால் மனிதர்கள் சத்தியத்தை அடக்கிவைக்கிறார்கள். அல்லது தங்களது சுயலாபத்துக்கக உண்மையை மறைத்துவிடுகிறார்கள்....more43minPlay
April 11, 2021007. Book of Romans Ch 1:16-17 Is Gospel Glamorous? Tamil Christian Message 2021நற்செய்தியில் மாம்ச இச்சையை திருப்திப்படுத்தும் காரணிகள் கிடையாது. நற்செய்தியை கவர்ச்சியாக வழங்க முடியாது. நற்செய்தியை வழங்கும் நிகழ்ச்சியை எத்தனை கவர்ச்சியாக வேண்டுமானாலும் வடிவமைத்துக்கொள்ளலாம். ஆனால் நற்செய்தியை கவர்ச்சியாக வழங்க முடியாது. காரணம், நற்செய்தியில் கவர்ச்சி ஒன்றுமில்லை. மக்கள் விருப்பத்துக்கு நற்செய்தியை வளைக்க முடியாது.நற்செய்தியில் இருப்பது சிலுவை. சிலுவையில் அறையப்பட்டவராய் தொங்கிக்கொண்டிருக்கும் கிறிஸ்து. சிலுவையில் என்ன கவர்ச்சி இருக்கிறது? உடல் முழுவதும் காயங்களுடன் உழுது போட்ட நிலத்தைப்போல சதைகள் பிய்ந்து தொங்கிக்கொண்டிருக்க இரத்தம் சொட்ட சொட்ட உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் கிறிஸ்துவினிடத்தில் என்ன கவர்ச்சி இருக்கிறது....more36minPlay
April 11, 2021006. Book of Romans Ch 1:8-17 Gospel to Christians? Why? Tamil Christian Message 2021முதலாவது, திருச்சபை கூடுகையில் கலந்துகொள்ளும் அனைவரும் இரட்சிக்கப்பட்டிருப்பார்கள் என சொல்ல முடியாது. வெவ்வேறு காரணங்களுக்காக ஆராதனைக்கு வரும் இரட்சிக்கப்படாத நபர்கள் எல்லா திருச்சபைகளிலும் இருப்பார்கள். அவர்களுக்கு நற்செய்தி தொடர்ந்து அறிவிக்கப்பட வேண்டும்.இரண்டாவது, அடிப்படை நற்செய்தியை இன்னும் முழுமையாக புரிந்துகொள்ளாத நபர்கள் திருச்சபைகளில் இருப்பார்கள். அவர்களுக்கு நற்செய்தி தெளிவுபடுத்தப்பட வேண்டும். நாம் எல்லாரும் ஒரு குறிப்பிட்ட சூழலில் இரட்சிக்கப்படுகிறோம். ஆனால் முழுமையாக நற்செய்தியின் சாரம்சத்தை புரிந்துகொண்ட பிறகுதான் கிறுஸ்துவை ஏற்றுக்கொண்டோமா என்றால் இல்லை. நற்செய்தியின் மைய சாராம்சம் எல்லா கிறிஸ்தவர்களுக்கும் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.மூன்றாவது, இதுதான் மிக முக்கியமானது, அடிப்படை நற்செய்தியை ஏற்றுக்கொண்டுவிட்ட நபர்களுக்கு நற்செய்தியின் முழுமை அறிவிக்கப்பட வேண்டும். அடிப்படை நற்செய்திக்கான ஒரு அளவுகோலாக அப்போஸ்தலர் விசுவாச பிரமாணத்தை கொள்ளமுடியும். ஆனால் முழுமையான நற்செய்தி அதையும் தாண்டி செல்கிறது....more37minPlay
April 09, 2021005. Book of Romans Ch 1:1-2 Translation Issues in Tamil Bible Tamil Christian Message 2021ரோமாபுரியில் உள்ள தேவப்பிரியர்கள்- பழைய மொழிபெயர்ப்பு தேவப்பிரியர்கள் தவறானது. தவறான மொழிபெயர்ப்பு என சொல்லுவதை விட அந்த மொழிபெயர்ப்பு சரியான அர்த்தத்தை வழங்கவில்லை என சொல்லலாம். சரியான மொழிபெயர்ப்பு - தேவன் பிரியமாய் இருப்பவர்கள் (beloved of God). புதிய திருப்புதலில் (இன்னும் அச்சுக்கு வரவில்லை-இணையத்தில் காணக்கிடைக்கிறது) - ரோமாபுரியில் உள்ள தேவனுக்குப் பிரியமானவர்களும் என சரியாக மாற்றியமைத்திருக்கிறார்கள். TERV என்று ஒரு தமிழ் மொழிபெயர்ப்பு உண்டு அதில் - தேவனுடைய நேசத்துக்குரியவர்கள் நீங்கள் என மொழிபெயர்த்திருக்கிறார்கள். கடவுளின் அன்பைப் பெற்று இறைமக்களாக அழைக்கப்பட்டுள்ள உரோமை நகர மக்கள் என பொது மொழிபெயர்ப்பு சொல்கிறது....more39minPlay
April 09, 2021004. Book of Romans Ch 1:6-7 Is Christ Divided? Tamil Christian Message 2021அனைத்து இன மக்களும், ரோம திருச்சபை மக்கள் உட்பட, இயேசுகிறிஸ்துவை முன்னிட்டு ஒரு குறிப்பிட்ட விசுவாச வடிவத்துக்கு (விசுவாசத்துக்கு - ஒருமை) தங்களை விட்டுக்கொடுக்கும் படி, விசுவாசத்தின் அடிப்படையில் நடக்க வைப்பதற்கு, இந்த ஊழியம் அப்போஸ்தலனாகிய பவுலுக்கும் அவரோடு இணைந்து பணிசெய்த மற்றவர்களுக்கும் கொடுக்கப்பட்டது. ஏனென்றால் மற்ற எல்லா விசுவாசிகளைப்போலவே ரோம திருச்சபை விசுவாசிகளும் இயேசுக்கிறிஸ்துவால் அழைக்கப்பட்டவர்கள்....more37minPlay
FAQs about VEDHAGAMAM DOT COM:How many episodes does VEDHAGAMAM DOT COM have?The podcast currently has 23 episodes available.