VEDHAGAMAM DOT COM

014. Book of Romans Ch 5:1-5 Assurance of Salvation-1 Tamil Christian Message 2021


Listen Later

நாம் விசுவாசத்தினால் இப்போது நீதிமான்களாக ஆக்கப்பட்டிருக்கிற படியால் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய்  கடவுளிடத்தில்  சமாதானம் உள்ளவர்களாக இருக்கிறோம். இரட்சிக்கப்பட்டவர்கள் முதலாவது உணர்ந்துகொள்ள வேண்டிய உண்மை இதுதான். கிறிஸ்து மூலமாய் நமக்கும் கடவுளுக்கும் இடையில் சமாதானம் உண்டாயிருக்கிறது. இந்த சமாதானம் எப்படி உண்டாயிருக்கிறது? நாம் கிருபையினால் விசுவாசத்தைக்கொண்டு நீதிமான்களாக ஆக்கப்பட்டிருக்கிறபடியால் உண்டாயிருக்கிறது. நாம் இயேசு கிறிஸ்து மூலமாக தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.

ஏசாயா 9:6 இயேசு கிறிஸ்துவை பற்றிய தீர்க்கதரிசனம்

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.

சமாதானப்பிரபு - அது அவருடைய நாமம். சமாதானம் செய்வது கிறிஸ்துவின் தன்மை. சமாதானம் செய்யும்படி கிறிஸ்து வந்தார்.

நாம் பாவிகளாக இருந்தோம். எனவே கடவுளுக்கு எதிரிகளாக இருந்தோம். அந்த பாவத்திற்கான தீர்வாக கிறிஸ்து மரித்து உயிர்த்தெழுந்தார். அதை நாம் நம்பினால் நீதிமான்களாக்கப்படுகிறோம். அப்படி நீதிமான்களாக்கப் பட்டிருப்போமானால்,  இனி நாம் தேவனுக்கு எதிரிகள் அல்ல. அவரிடத்தில் கிறிஸ்து மூலமாய் சமாதானம் பெற்றிருக்கிறோம்.

...more
View all episodesView all episodes
Download on the App Store

VEDHAGAMAM DOT COMBy VEDHAGAMAM DOT COM