VEDHAGAMAM DOT COM

022. Book of Romans 8:18-39 Assurance of Glory while sufferings of Faith Tamil Christian Message 2021


Listen Later

29 ஆவது வசனத்திலிருந்து அதை தொடர்ந்து வாசிக்கும்போது ஒரு விசுவாசியின் வாழ்வில் கடவுளின் முடிவடைந்த திட்டம் அறிவிக்கப்படுகிறது. நான் ஏன் அதை முடிவடைந்த திட்டம் என்று சொல்லுகிறேன் என்றால் அந்த பத்தியில் சொல்லப்பட்டிருக்கிற அனைத்தும் கடந்த காலத்தில் (Past Tence) சொல்லப்பட்டிருக்கிறது. கடவுள் தமது பிள்ளைகளை முன்னறிந்தார் - முன்குறித்தார்-அழைத்தார்-நீதிமானாக்கினார்-மகிமைப்படுத்தினார். நாம் பொதுவாக கடவுள் நம்மை முன்னறித்தது, முன்குறித்தது, அழைத்தது, நீதிமானாக்கியது எல்லாம் கடந்த காலம். ஆனால் மகிமைப்படுத்துவது இனிமேல் தான் நிகழப்போகிற காரியம் என்று நினைக்கிறோம். ஆனால் வேதாகமம் தவறாதன்மை உடையது, பிழையற்றது என்பதை உணருவோமானால் ஒரு விசுவாசியின் மகிமைப்படுத்தப்படுதலும் முடிவடைந்துவிட்ட ஒரு விஷயம் என்பதை ஏற்பதில் ஒரு சிக்கலும் இருக்காது. அதாவது கடவுளின் பார்வையில் ஒரு விசுவாசியின் மகிமைப்படுத்தப்படுதல் என்பது ஏற்கனவே முடிந்துவிட்ட ஒரு காரியம்.

இது எப்படி சாத்தியம்? ஏனென்றால் நம்மை அழைத்தவர் கடவுள்.

...more
View all episodesView all episodes
Download on the App Store

VEDHAGAMAM DOT COMBy VEDHAGAMAM DOT COM