நவம்பர் 5, 1872. அமெரிக்காவின் 13வது குடியரசுத் தலைவர் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. உலகின் ஏனைய நாடுகளைப் போல அமெரிக்காவிலும் அப்போது ஆண்களுக்கு மட்டுமே வாக்குரிமை வழங்கப்பட்டிருந்தது. 14வது சட்டத்திருத்ததால், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வாக்குரிமை பெற்ற கறுப்பின மக்கள், தங்கள் முதல் தேர்தலில் கூட்டம் கூட்டமாக வந்து வாக்குச் செலுத்தினர்.
திடீரென ஒரு பெண் கூட்டத்திற்குள் நுழைந்தாள். ஒட்டுமொத்த அமெரிக்காவிலும் வாக்குச் செலுத்த வந்த ஒரே பெண், சூசன் பி ஆண்டனி. பல ஆண்டுகளாக அமெரிக்க, ஐரோப்பிய தேசம் முழுக்க பெண்ணுரிமைக்கு குரல்கொடுத்து வரும் சூசன், நேரடியாகக் களத்தில் குதித்தது இந்தத் தேர்தலில் தான். அடுத்த ஒரு வாரத்திற்கு அமெரிக்கா முழுக்க இவர் பெயர்தான்.
மாதம் கழிந்தது. சட்ட உரிமை மீறி வாக்கு செலுத்தியதற்காக சூசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. $1000 கட்டியதும் பிணையில் விடுவிக்கப்பட்டார். ஆனால் அத்தோடு நிற்கவில்லை.
ஜூன் 17, 1873-ல் நியூயார்க் நகர நீதிமன்றத்தால் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். இவர் அளித்த வாக்கு செல்லுபடியாகாது போனாலும், அந்தத் தேர்தலில் வெற்றிப்பெற்ற 13வது அமெரிக்க அதிபர் மில்லார்ட் ஃபில்மோர் அந்த அவையில்தான் வீற்றிருந்தார். விசாரணை ஆரம்பமானது. தன் தரப்பு வாதங்களாக சூசன் சொன்னவை "பெண் வாக்குரிமைக்கு வாய்ப்பூட்டு போட்டவர்களை வாயடைக்கச் செய்தது". உதிர்த்த ஒவ்வொரு வார்த்தைகளும் தங்கத்தால் பொறிக்க தவமிருந்தன போல. அத்தனை ஆண்களுக்கு முன்னதாக தனியொருப் பெண்ணாய், பேசத் தொடங்கினார் சூசன்.
அமெரிக்க வரலாற்றில் மட்டுமல்ல, மகளிர் வாக்குரிமை வரலாற்றிலேயே சூசனின் போராட்டம் ஒரு மகத்தான மைல்கல். இவர் இறந்த 14 ஆண்டுகளில் அமெரிக்கப் பெண்கள் வாக்குரிமை பெற்றுவிட்டனர்.
உலகெங்கிலும் உள்ள பெண்கள், இன்று ஜனநாயக முறைப்படி வாக்களிக்க நேரடியாகவோ மறைமுகமாகவோ சூசன் - ஓர் அசாத்திய ஊன்றுகோல். அமெரிக்காவை நடுங்க அந்த ஒற்றைப் பெண்ணின் மெல்லிய குரல் இதோ..