அப்போஸ்தலர் பவுலின் வாழ்க்கையில் இருந்து, ஒரு உண்மையை, நாங்கள் மிகத் தெளிவாகக், கண்டு கொள்ளலாம். கர்த்தர் எங்கள் ஒவ்வொருவருக்கும் வைத்திருக்கும், திட்டத்தையும், நோக்கத்தையும், பற்றி முன் கூட்டியே, அறிவிக்க மாட்டார். நாங்களும், ஒருபோதும் அறியோம். இந்தத் திட்டங்கள் எங்கள் வாழ்க்கையில் நிறைவேற்றப்பட, நாங்கள் பல சவால்களையும், வேதனைகளையும், துன்பங்களையும், எதிர் நோக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். இந்த வேலைகளில் கர்த்தரின் அளப்பரிய கருணை, எங்களைத் தாங்கி வழிநடத்துகிறது.