கர்த்தர் எங்கள் ஒவ்வொருவருக்கும், ஒரு பிரத்தியேக அபிஷேகத்தையும், திட்டத்தையும், வைத்திருக்கிறார். இந்தத் திட்டங்கள்
நிறைவேற்றப்பட, நாங்கள் பல சவால்களுக்குள் போய் வரக்கூடிய ஒரு நிர்பந்தம் ஏற்படுகிறது.
இந்தக் கதையில், கர்த்தர் எலியாவை, மகத்துவமான முறையில்,
அவனை பயன்படுத்துவதற்காகத் தான், இந்த சோதனைகள் அவனுக்கு, அவனது ஊழியத்தின் ஆரம்ப காலத்தில்,
கர்த்தரால் நிர்ணயிக்கப்பட்டது. ஆகவே, எங்கள் வாழ்வில் வரும், சவால்கள் எல்லாம், எங்கள்
கடவுள் நம்பிக்கையும், விசுவாசத்தையும் பலப்படுத்துவதற்கு மாத்திரமன்றி, அந்த சவால்களின்
நிமித்தம் கர்த்தர் அவரின் நாமத்தை மகிமைப்படுத்த, எங்களை கருவிகளாக பாவிக்கிறார்.