Seyalmantram

அத்தான் சொல்லாக்கம் - தங்க அத்தான்


Listen Later

"அத்தான்" என்ற சொல்லாக்கம் *தங்க அத்தான்* பாரதிதாசன் பதித்த
"பொன் அத்தான்" கவிதையை தழுவிய - 'செயல் மன்றம்' பதிவரின் பதிவு .
அத்தான்
அத்து + தான் புணர்ச்சியில்
"அத்தான்" என்ற சொல்லாகும்.
அத்துச்சாரியை ஏற்ற பெயர், பெயரொடு கூடினால் கிழமை அல்லது இடப்பொருளையும் வினையொடு கூடினால் இடப்பொருளையும் உணர்த்தும்.
தான் என்ற படர்க்கை ஒருமைப் பெயர் ஆகும்.
தன் → தான் = படர்க்கை ஓருமையைக் குறிக்கும்
"தான்" என்னும்
சுட்டுப்பெயரின் முத்தைய வடிவம்
"ஆன்" என்பதாகும். இது
"ஆ" என்னுஞ் சேம்மைச் சுட்டடியினின்று முகிழ்த்தது.
'தான்' என்பது கிரேக்க மொழியில் வழங்கும் சொல் வளம் என சொற்குவையில் குறிப்பிட்டு உள்ளனர்.
தங்க அத்தான்
உனை
மணக்கத்தான் வந்தத்தான்
குளிர்வித்தான் பூவைத்தான்
வைத்தானே இங்கே அவளை
உன் அத்தான் சிந்தை
மகிழ்வித்தான்
பற்றுயர்ந்த தங்க அத்தான்
நற்
குணத்தில்தான் பொலிவுற்றான்
அன்பைத்தான் மிகுந்திட்டான்
என் அத்தான்-ஒரு
மாம்பழத்தை கொய்தித்தான் பிடித்தணைத்தான்
சீருடலை சேர்த்தணைத்தான்
நேரிலைழைத்தான்
திரும்பும் திசையில் என் அத்தான்
விரும்புவதும்
உலகத்திலே என்னைத்தான்
என் பேரைத்தான் சிந்தித்தான்
ஊரைத்தான் நோக்கித்தான்
பெயர்கின்றான் ஞானப்பெண்ணே
என் தங்க அத்தான்
-------------------------
அத்தான்:
சொல்லாக்கம் காண்போம்:
அத்து+ஆன்=
தமிழில் சில சொற்களைச் சேர்த்துக் கூறும்பொழுது ஒலிப்பதற்குக் கொஞ்சம் எளிமையாக இருக்கும் பொருட்டு, இடையே இடப்படும் சொற்கள் சாரியை எனப்படும்.
'அத்து' என்ற சொல்
தொல்காப்பியம் எழுத்து அதிகாரம் தொகை மரபு
உயிரீறு மெய்யீறுகளின் சிறப்பு புணர்ச்சி குறிப்பிட்டு உள்ளாதாவது :
168.
அத்து இடை வரூஉம் 'கலம்' என் அளவே.
மேலும்,
219. உயிர் மயங்கியல்
305. புள்ளி மயங்கியல் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொல்காப்பியம் எழுத்து அதிகாரம்
200.
"ஒன்று முதலாகப் பத்தூர்ந்து வரூஉம்
எல்லா எண்ணுஞ் சொல்லுங் காலை
ஆனிடை வரினும் மான மில்லை
அஃதென் கிளவி ஆவயிற் கெடுமே
உய்தல் வேண்டும் பஃகான் மெய்யே."
ஒன்று முதல் ஆக பத்து ஊர்ந்து வரூஉம்
எல்லா எண்ணும் சொல்லும் வேளையில் அந்த சொல்லுக்கு ஆன்சாரியை இடைவரினும் குற்றமில்லை.
இச்சாரியைகள் விகுதிப்புணர்ச்சி, பதப்புணர்ச்சி, உருபுபுணர்ச்சி என்ற மூன்று புணர்ச்சிகளிலும், தனிமொழிகளிலும் வருதலினால் பொதுச்சாரியைகள்
என்று கூறப்படுகிறது.
'ஆன்' எனும் சொல்
சாரியைக் குறிக்கும்.
சாரியை குறித்து
பொது சாரியை
நன்னூல், 243 இல் குறிப்பிட்டு உள்ளாதாவது:
"பதம்முன் விகுதியும் பதமும் உருபும்
புணர்வழி ஒன்றும் பலவும் சாரியை
வருதலும், தவிர்தலும், விகற்பமும் ஆகும். "
விகுதிப்புணர்ச்சியில் சாரியை
விகுதி : " 'வி'யப்பூட்டும் 'கு'றியீட்டு 'தி'சை
திசை : திறனின் சைகை என்போம்.
'தி' திறன் கொண்ட சொல்லினைக் குறிக்கும்.
தான் எனும் சொல்
மெய்யீறுகள் குறித்து
தொல்காப்பியம் எழுத்து அதிகாரம் உருபியல் 192 இல்
'தான்யான் என்னும் ஆயீ ரிறுதியும்
மேன்முப் பெயரோடும் வேறுபா டிலவே'
தான் யான் என்னும் ஆ ஈர் இறுதியும்- தான் யான் என்று சொல்லப்படும் அவ்விரண்டு னகர வீறும், மேல் முப்பெயரொடும் வேறுபாடு இல-
'தான்' என்பது தா(த+ஆ) நெடுமுதல் குறுகியும்
'ஆன்' " விகுதி" பெற்று
"வியப்பூட்டும் குறியீட்டு திறனாகிய"
புணர்ச்சியினை குறிப்பிட்டு உள்ளார்.
...more
View all episodesView all episodes
Download on the App Store

SeyalmantramBy Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy