தினசரி வாழ்க்கையில் குழந்தைகளைக் கட்டுப்படுத்துவது என்பது எளிதான காரியம் அல்ல . குழந்தைகள் நாம் சொல்வதை ஒருபோதும் சட்டை செய்ய மாட்டார்கள் மேலே ஏறி கீழே இறங்கி எதையோ தேடி ஓடி விழுந்து மண்டையைஉடைத்து இரத்தம் சொட்ட சொட்ட நம் முன் வந்திருப்பார்கள். தூக்க கலக்கத்தில் மாடியில் இருந்து உருளுவார்கள் சைக்கிள் ஓட்டிச் செல்லும்போது தவறி விழுந்து மண்டை உடைந்து வருவார்கள் சில நேரங்களில் தொட்டிலில் இருக்கும் கைக்குழந்தை கூட எட்டி தலையை நீட்டி தவறி விழுந்து மண்டையில் காயத்தோடு வரும். அண்ணன் தூக்கிக் கைதவறி விழுந்த குழந்தை ,தம்பி தள்ளிவிட்டு காயம் ஆன அண்ணன், எதிரே வந்தவர்கள் மோதி தலையில் காயம் என தலைக்காயம் வாழ்க்கையில் மிகப்பெரிய பயத்தினை ஏற்படுத்தி இருக்கும் ஒவ்வொரு தலைக்காயத்திற்கும் பெற்றோர்களுக்கு ஏற்படும் பயம் குழந்தைக்கு தலையில் முன் பகுதியில் நெற்றியில் பின்பகுதியில் ஒரு காயம் ஏற்பட்டிருக்கும். இரத்தம் பீச்சுட்டு அடிக்க வீட்டில் அருகில் இருந்தவர்கள் மஞ்சள், காப்பித்தூள், அரிசி மாவு, பவுடர் என அப்பி கண்ணீரும் கம்பலையுமாக மருத்துவமனைக்கு வந்திருப்பார்கள் வலியின் காரணமாக குழந்தையின் அழுகை ஒரு புறம். குழந்தையை சரியாக பார்த்துக் கொள்ளவில்லை என்று தன் உறவினர்கள் ஏசுவார்கள் என்று கவலையில் தாயின் அழுகை இன்னொரு புறம் . தலைக்காயம் அவ்வளவு ஆபத்தானதா? சிறிய காயத்திற்கும் சிடி ஸ்கேன் எடுக்க வேண்டுமா? தலைக்காயத்தின் ஆபத்தான அறிகுறிகள் என்ன? மருத்துவமனைக்கு எப்போது செல்ல வேண்டும்? ஒவ்வொரு தலைக்காயத்திற்கும் தடுப்பூசி டிடி போட வேண்டுமா ? தலைக்காயம் சீரான வெட்டாக இருக்கலாம் அல்லது கோணல் மாதங்களாக ஓரங்கள் தாறுமாறாக கந்தல் போல இருக்கலாம் இதை முதலில் கவனிப்பது முக்கியம் காயத்தின் மேல் அப்பிஇருக்கும் தூசு குப்பை முதல் ஆரம்பித்து பூசப்பட்ட மஞ்சள், காப்பித்தூள் மாவு இவைகளை முதலில் சுத்தமான சலின்\நீர் மூலம் நீக்க, வேண்டும் அதை கழுவிய பிறகுதான் எவ்வளவு தூரம் ஆழமாகவும் அகலமாகவும் காயம் ஏற்பட்டிருக்கிறது என்பதனை அறிய முடியும் .சிறிய கோடு போன்ற காயமாக இருப்பின் தையல் இல்லாமல் அதனை ஒட்டி விடுவதற்கு கோந்து இருக்கிறது. சில வகையான காயங்களை சர்ஜிகல் ஸ்டேப்ளர் மூலம் பின் அடித்து சேர்க்க முடியும் புண்ணை உற்று நோக்கி ஆழமாகவும் அகலமாகவும் இருக்கிறது இதற்கு தையல் போட வேண்டும் என்று சொன்னால் உடனே பெற்றோர்கள் தையல் இல்லாமல் போட முடியாதா? குழந்தை அழுவானே? வலி இருக்குமே ?என்று கவலைப்படுவார் மருந்து மட்டும் போடுங்கள்! அப்படியே ஆறிப் போய்விடும் அல்லவா ?என்றும் கேட்பார்கள். புண் ஆழமாகவும் அகலமாகவும் இருப்பின் மருந்துகள் மூலமாகவும் கட்டு போடுவதன் மூலமாகவும் காயம் ஆறுவதற்கு நாட்கள் அதிகமாகும்.புண் இடைவெளி அதிகமாக இருக்கும் போது தழும்பும் பெரியதாகும், தலையில் முடி வளரும் இடத்தில் தழும்பு ஏற்பட்டால் வேர்க்கால்கள் இல்லாத பகுதியாகும் மீண்டும் முடி முளைக்காது . எனவே காயம் ஏற்பட்ட இடத்தை சுத்தமாகக் கழுவி சீரிய முறையில் நோய்த்தொற்று நீக்கப்பட்ட கருவிகளை பயன்படுத்தி தேவைப்பட்டால் வலி இல்லாமல் மருந்தினை செலுத்தி தூங்கும் மருந்துகளை தந்து தையல் போடும்போது சுலபமாக முடிந்து விடும் இந்த குழந்தைகளுக்குத் தேவைப்படும் நுண்ணுயிர்க்கொல்லி மருந்து தரப்படும் தடுப்பூசி கடைசி ஆறு மாதங்களுக்குள் போடப்படாமல் இருந்தால் முதல் இரண்டு வயதிற்குள் வயதிற்கு ஏற்ப தடுப்பூசி தரப்படும். சரியாகது தடுப்பூசி போட்ட குழந்தைக்கு ( ஐந்து வயதுக்கு பிறகு பத்து வயது வரை) காயம் ஏற்பட்டால் மறுபடியும் தடுப்பு ஊசி போட வேண்டியது இல்லை குழந்தையின் பெற்றோர்கள் அடிபட்ட பிறகு குழந்தை எப்படி இருந்தது ?மயக்கம் ஏற்பட்டதா? எவ்வளவு நேரம் சுயநினைவு இல்லாமல் இருந்தது? ஜன்னி ஏதாவது வந்ததா? குழந்தையை நினைவு இழந்து மலம் ஜலம் கழித்ததா? குழந்தையின் சுயநினைவு பாதிக்கப்பட்டிருக்கிறதா? விடாத தலைவலி என்று அழுகிறதா? குழந்தையின் நடத்தை மாறி இருக்கிறதா ?தாயைப் பார்த்து சிரிக்காமல் எங்கேயோ பார்த்து அழுது கொண்டிருக்கிறதா? ஆகியவை தலைக்குள்ளேயே பிரச்சனை ஏற்படுத்திருக்கலாம் என்பதனை காண்பிக்கும் . தலைக்கு சிடிஸ்கான் எடுத்து மண்டையில் உள்ள மூளைக்கு மூளை சுற்றியுள்ள பகுதிகளில் ரத்தக்கசிவோ ரத்தக்கட்டு ஏற்பட்டுள்ளதா என்பதனை தெரிந்து கொள்ள வேண்டும் இந்த அறிகுறிகள் இல்லை என்றால் உங்கள் குழந்தைகள் நல மருத்துவர் உங்கள் குழந்தையை சில மணி நேரம் இருக்க சொல்லுவார் அதற்குப் பிறகும் வாந்தியோ தொல்லை இருந்தால் மறுபரிசீலனை செய்ய வேண்டும் எதுவும் இல்லை என்றால் வீட்டிற்கு போகலாம் அடுத்த 48 மணி நேரத்திற்கு தலைவலி வாந்தி நினைவு மாறல் உள்பட பாதிப்புகள் ஏதும் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு வர வேண்டியது இருக்கும் தேவைப்பட்டால் அந்த குழந்தைகளுக்கு சிடி ஸ்கேன் எடுக்க வேண்டியது இருக்கும் லேசான தலைக்காயம்தான். எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் உங்கள் குழந்தைக்கு இருப்பின் கவலைப்பட வேண்டாம் ஒவ்வொரு முறையும் தலை சிடி ஸ்கேன் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை தேவைப்பட்டால் மட்டுமே உங்கள் மருத்துவர் ஆலோசனைப்படி சிடி ஸ்கேன் எடுத்து இந்த பிரச்சனையும் இல்லை என்பதனை உறுதி செய்து கொள்ளலாம் ஐந்து அல்லது ஏழு நாட்களுக்குப் பிறகு மருத்துவரிடம் சென்று தையல் போட்ட குழந்தைகளுக்கு தையல் பிரித்து வழக்கம் போல குழந்தை இருக்கலாம் தலைக்கு தண்ணி ஊற்றுவது அல்லது விளையாடுவது என வேறு எந்த பிரச்சனையோ ஏற்படாது