#உரையாடல்கள் #சந்திப்புகள் #பந்தம் #அன்பு #நட்பு #Conversations
சில உரையாடல்கள், வண்ணங்களின் ஒலி விழாவாய் பிரபஞ்சம் நிகழ்த்தும்...
ஓர் மழை பூத்த மாலையில், ப்ரியமான தோழியுடன்/தோழனுடன் நீண்டதூரம் நடந்து சென்ற ஔடத உணர்வளிக்கும்...
சந்திப்புகள் யாவும் ஏதோ ஒன்றைக் கற்றுத்தரும் தான், ஆனால் நிலைப்பதில்லை...
சில சந்திப்புகள், ஓர் அழகான பந்தமாய், நிலைத்திருக்கும் சாத்தியங்களோடு, கலையும் வாழ்வும் வாழும் கலையும் பற்றிய உரையாடல் தளமாய் துளிர்க்கும்... நம்மை இன்னொருவரில் சந்திப்போம்... வியப்போம்...
அரிதாரமற்ற நிஜங்களை, கண்ணீர், புன்னகை, கனவுகள், பிரபஞ்ச விந்தைகள் எதனெதன் மீதெல்லாம் காதல், கலைகளின் ஆழம், வாழ்வின் சாரம், உடையும் தருணங்களும் சில மனிதர்களும் கசப்புகளும் கற்றுத்தரும் பாடம்...
நாம் வீழ்கையில் ஒளியாய் எவரெல்லாம், விலகி ஓடி ஒளிந்தது எவரெல்லாம், கற்ற முதல் பாடமாய் பிறருக்கு தோள் கொடுக்க முனைதல், நம்மை செதுக்கிக் கொள்கையில் உளி ஏற்படுத்தும் வலிகளைப் புரிந்து கொள்ளுதல்...
நஞ்சாக வலம் வருவோரிடமிருந்து விலகி நிற்றல், களையெடுக்க கற்றல்...
இன்னும் எத்தனையோ சங்கதிகளை சங்கீதமாய் சுகித்து உரையாடல்கள்...
வண்ணங்களின் மொழியில் நிகழும்...
அத்தருணங்கள் பூக்கின்ற பொழுதெல்லாம், வாழ்வின் மீது இன்னும் அதிகமாய் காதல் பூக்கிறது...
சில உரையாடல்கள் - உள் நிகழும் பயணங்கள்...
சில சந்திப்புகள், 'நன்றி' எனும் உணர்வை அதிகம் நிறைக்கின்றன மனதில்...
♥️
#ஔடதம் #வண்ணங்கள் #மொழி #கலை #பிரபஞ்சம் #அரிதாரமற்றஉறவுகள் #conversations #Bonds #GenuineHumanConnections #ArtBridges #Universe