Share Eniyavanin kural
Share to email
Share to Facebook
Share to X
இப்பழமொழியில் இரண்டு விஷயங்கள் நளினமாய் மறைக்கப்பட்டுள்ளன. நல்லவை ஆவதும் பெண்ணாலே தீயவை அழிவதும் பெண்ணாலே என்று வந்திருக்க வேண்டும். அவசர உலகில் பேசுவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த பழமொழியில் நல்லவை, தீயவை என்ற இரண்டு வார்த்தைகளும் மறக்கப்பட்டு ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்று வந்துவிட்டது.
நம் முன்னோர்கள் கூறிய பழமொழிகளில் சில காலப்போக்கில் மாற்றப்பட்டுள்ளதற்கு இதுவும் நல்ல உதாரணம். ஏனென்றால், “ஆயிரம் முறை போய் சொல்லி திருமணம் செய்” என்பதே உண்மையான பழமொழியாகும். காலப்போக்கில் “போய் சொல்லி” என்ற வார்த்தை “பொய் சொல்லி” என மாற்றப்பட்டு விட்டது.
ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்பதுதான் ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்று ஆகிவிட்டது.
நம் நாட்டில் சித்த வைத்தியம்தான் சிறப்பாகவும், சீராகவும் இருந்து வந்தது. அதை அடிப்படையாகவும் வைத்தியர்களை மனதில் வைத்தும் சொல்லப்பட்டதுதான் இது.
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு, நல்ல மனிதனுக்கு ஒரு சொல் என்று மனிதர்களுக்காக மாறுபட்ட மறுவப்பட்ட பழமொழி இது. ஒரு விஷயத்தை ஒரு தடவை சொன்னவுடன் அதை அறிந்து புரிந்து அதை கேட்டு அதன்படியே நடப்பவன்தான் நல்ல மனிதன்.
நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு, சுவடு என்ற வார்த்தை மருவி சூடு என்றாகி விட்டது. அதாவது இதன் விளக்கம் சந்தையில் மாட்டை வாங்க நினைப்பவர்கள் தடத்தை வைத்து கவனித்து வாங்குவார்கள். அதாவது அது பதிக்கும் தடம் நன்றாக நல்ல அழுத்தமான சுவட்டை பதிக்கும் மாடே அதிக பலம் வாய்ந்ததாக இருக்கும் மாட்டின் வலிமையும் உடல் நலத்தை கவனிப்பதற்காகவே இப்பழமொழி கூறி உள்ளார்கள்.
பழமொழி: அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான்.
The podcast currently has 21 episodes available.