ஸ்விடன் நாட்டைச் சார்ந்த சுட்டிக் குழந்தை நம் கிரேட்டா தன்பெர்க். இவர் ஒரு காலநிலைப் போராளி. Fridays for future என்ற காலநிலை மாற்ற எதிர்ப்பு இயக்கத்தால் உலகெங்கிலும் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்களை வெகுவாகக் கட்டியிழுத்தவர். காலநிலை மாற்றத்தால் உலகெங்கும் பல்வேறு பேரழிவுகள் நிகழ்ந்துகொண்டிருக்க, முன்னணி தேசத் தலைவர்களோ பொருளாதாரம், வியாபாரம், வளர்ச்சி என்ற ஒற்றைக் கண்ணோட்டத்தில் ஆண்டு வருகிறார்கள். இதன் அத்தனை கோபத்தையும் அள்ளிவாரிப் போட்டுக்கொண்டு 2019-ம் ஆண்டு ஐக்கிய சபையில் அவர் பேசிய How Dare You? என்ற உரை அத்தனை வலி நிறைந்தது. உலகத் தலைவர்களை ஒண்டி ஆளாக சரமாரி கேள்விகளால், துவம்சம் செய்த 16 வயதே நிறைந்த கிரேட்டாவின் பேச்சு இதோ..