Varalaaru Valartha Vaaigal

I Have a Dream | Martin Luther King Jr


Listen Later

மார்ட்டின் லூதர் கிங். 


முற்போக்கு வரலாற்றின் முழுமுதற் வடிவம். கறுப்பின மக்களின் பாதுகாவலன்.  இன துவேஷம் எதிர்த்த மதபோதகர். அமெரிக்கவாழ் காந்தியவாதி. இவ்வாறு பல பட்டங்களுக்கு பொருத்தமான, பல்துறை வித்தகர்.

அடிமைப்பட்டுக் கிடந்த அமெரிக்கவாழ் ஆப்ரிக்கர்களை புரட்சி தீ கொண்டு விழிப்படையச் செய்த மகான். இருளை ஒளி கொண்டு விரட்டுவதுபோல, வெறுப்பை அன்பு கொண்டு அரவணைத்தவர். நீதியின் கரங்கள் நீக்கமற நிறைந்திருந்தாலும், துளியளவு அநீதி அதை கேள்விக்குள்ளாக்கும் என்ற தத்துவஞானி.

உலக வல்லரசாகத் திகழும் அமெரிக்காவின் அழுக்குகளை தனியொருவராக முன்னின்று சுத்தப்படுத்தியவர். இத்தனை பாரங்களையும் தலைமேல் போட்டுக்கொண்டு - பெரும் கனவு ஒன்றை சுமந்துகொண்டிருந்தார்.

1963-ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ம் நாள் வாஷிங்டனில் உள்ள லிங்கன் நினைவிடத்தின் முன்னால் மார்டின் லூதர் கிங் பேச்சைக் கேட்க 2,50,000 மக்கள் ஒன்றுகூடியிருந்தனர். அதில் 60,000 பேர் வெள்ளையின மக்கள்.

தடித்த குரலில் தொடங்கிய மார்ட்டினின் பேச்சு இறுதிகட்டத்தை நெருங்கும்போது தழுதழுத்தது. உலகின் தலைசிறந்த பேச்சுக்களின் வரிசையில் 20-ம் நூற்றாண்டில் அசைக்கமுடியாத இடத்திலிருக்கும் மார்ட்டினின் பெருங்கனவுப் பேச்சு இதோ..

...more
View all episodesView all episodes
Download on the App Store

Varalaaru Valartha VaaigalBy Satheesh Kumar