ஒரு பெண் , வேலைக்கு சென்ற பின், தனது குடும்பத்திற்கு எழுதும் மடல்.
அவளை நம்பி வீட்டில் இருக்கும் இவளது குடும்பத்தின் கண்ணீரோ பெருங்கடல் !
நடை உடை பாவனைகளால் இவள் அடைந்த வேதனைகள் பல!
"இடத்துக்கு ஏத்த மாறி மாறிடனும். இப்படியெல்லாம் இருந்தால் வேலைக்கு ஆகாது " என்று கிடைக்கும் போதனைகள் சில!
இதையல்லாம் மண்ணில் புதைத்துவிட்டு , மனதில் பூரிப்போடு பேனா மை சிந்தும் சொற்கள் சில!
அவள் கண் மை சிந்தும் கண்ணீர் துளிகள் பல!
இவை எல்லாம் கடந்து வந்துரலாம் என்ற நம்பிக்கையும் இப்போது அவளை கடந்து சென்றது, அத்துயர் செய்தி கேட்ட போது...
துள்ளி குதித்து விளையாடிய வீடு இப்போது துஷ்டி வீடாய் மாறிய கலக்கம் ;
மருந்து syrup வாங்க தாமதம் ஆன காரணத்திற்கு இனி யாரிடம் சொல்வாள் , விளக்கம்?
ஆச்சரிய குறி எதிர்பார்த்த இடத்தில் , இப்பொழுது முழுக்க முழுக்க கேள்வி குறிகளே நிரம்பி உள்ளது.
ஆனால்,
இதுவும் கடந்து போகும்.
சரி தானே?? 🙂