1) பூப்பறித்தவாறே மகளோடு வீடியோ கால் வழமையாகிவிட்டது அவளுக்கு!!! மாத்திரைகளோடு உணவும் ஆகிவிட்டதா?? சம்பிரதாய விசாரிப்புகள்……. அடுத்தடுத்த அறைகளில் பேச ஏதுமற்று இரு வேறு உலகத்தில் புதைந்திருந்ததுண்டு!!! தூர தேசத்தில் மனம் பற்றிப் படர கொம்பற்று அலைக்கற்றையாக அலைமோதி அலை பேசுகிறது…. பக்கத்து வீட்டுக்காரி உதட்டுச்சாயத்தின் விமர்சனத்தை!! அம்மாவோடு விவாதிக்காமல் எப்படி?? என்ன சொன்னாலும் ம்ம்ம்…..கொட்ட வேண்டுமே?? அம்மாவாச்சே…. ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்… என்றே …. ஒலி ஒளியான மகளை உணரத் துடிக்கிறாள் கடலும்…. நிலமும்…. மலையும் …..காற்றும்…. நீலமாய் […]