Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
FAQs about Nutpam -Podcast:How many episodes does Nutpam -Podcast have?The podcast currently has 20 episodes available.
September 04, 2025கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள்முன்பொரு வேட்டை இருந்தது இதற்கு மேல் என்ன செய்வது அடைபட்ட வாசலில் மீதமிருந்த சுவடு கனவில் தினந்தோறும் படிந்து மீள்கிறது வேறெப்போதோ மீளாமல் விடைபெற்ற பொழுதின் கண்ணில் துளைத்து போகிறதொரு பகல் பழைய கண் எனில் இரவின் புறவாசலில் காத்திருக்கவும் செய்வேன் ஒரு வீண் பழித்தலை இருவழி காரணங்களோடு புதைக்கும் புல்மேட்டில் புதிய மாடுகள் மேய்கின்றன பசியாறா மொழியைத் துவண்டிடச் செய்யும் இடைவெட்டு கட்டளைகளை காபந்து செய்வதற்காக ஒரு கள்ளத்துப்பாக்கியை நீட்டுகிறேன் என்னை நோக்கி சாவுக்கான புல்லட் […]...more6minPlay
September 04, 2025பாலைவன லாந்தர் கவிதைகள்நான் குப்பை கவிதை நெகிழிக்கவிதைகள் நான் தூக்கியெறியப்பட்டும் யுகம் யுகமாய் மக்கிப்போகாமல் ஆழ்கடல் மீன்களின் குடல்களுக்குள் ஒழிந்து இரைப்பையின் மூச்சுக்குழாய் மத்தியில் இளைப்பாறுகின்றேன் தேர்வு மற்றும் தேர்தல் முடிவுத்தாள்கள் கவிதை நான் இருபுறமும் வயிறு புடைத்த சாம்பல் நிற கழுதையின் கடவாய் பற்களில் அரைபடுகின்றேன் செயற்கை முறையில் பழுக்கவைக்கப்பட்ட பழங்களின் கவிதை நான் இதோ முந்நூறு கிலோமீட்டர் தொலைவில் தான் மேட் இன் வாசிங்டன் இருக்கிறது என்று சொல்ல திராணியற்று உருக்குலைந்து கொண்டிருக்கிறேன் எந்த கவர்ச்சியுமற்ற சாதாரண […]...more5minPlay
September 03, 2025பூவிதழ் உமேஷ் கவிதைபொய்யின் சுவை அந்த வாழை மரத்தை நட்ட பிறகே பொய் சொல்ல ஆரம்பித்தேன் தினம் சொல்லும் பொய்க்கு ஏற்ப வளைய ஆரம்பித்தது வாழை மரம் முதலில் சிரிப்பை வரவழைக்க பொய் சொன்னேன். கேலி செய்யவும் மற்றவர்களைத் திருப்தி படுத்தவும் நான் திருப்தி அடையவும் மற்றவர்களைத் தப்பிக்க வைக்கவும் நான் தப்பித்துக் கொள்ளவும் என பொய்க்கான காரணங்கள் பெருகின பொய்களுக்குத் தக்கபடி பாம்பு போல வளைந்து வளைந்து வளர்ந்தது வாழை மரம் அதிசய வாழை மரம் என்று பார்த்தார்கள் […]...more3minPlay
September 03, 2025நீராட்டு1. யோசித்த மாத்திரத்தில் குரல் ஒலிக்கும் மாயம் எண்ணித் தரத்தெரியாத கன்னத்து எச்சில் முத்தங்கள் அடிக்கடி உண்டாகும் ஒத்த அலைவரிசையில் அடிக்கும் ஹைஃபை பார்ப்போமா என நினைக்கையில் திடீர் தரிசனம் தரும் நட்சத்திர மினுக்கல் முகம் ரசனை கூடிய அன்பின் கொஞ்சலாட்டங்கள் நிறைவின் உச்சாணிக்கொம்பேறிய ப்ரியம் இருந்தும் நினைக்கையில் எல்லாம் கண்ணீர் பெருகியோடும் நேசத்தை ஏன் பரிசளித்தீர் தேவ? 2. மகிழ்வுப்பொழுதின் அந்தியில் முந்தியில் வரைந்திட்ட ஜோடி ஓவியத்தில் காதலை முடிந்து வைத்திருந்ததாய் நினைத்துக் கொண்டிருப்பவளுக்கு இல்லையில்லையென […]...more3minPlay
September 03, 2025நிலத்துரிமைஉங்களது வரையறை வட்டத்திற்குள் எல்லாம் ஆழ்ந்துறங்க முடியாது என் நிலம் என் வானம் என் தூக்கம் எனதே எனதான கனவு என் கனாவைக் காணவிட்டுக் கொஞ்சம் கவனமாக நடந்து செல்லுங்கள் தோராயமான உங்கள் வட்டத்திற்கு வெளியேகூட என் கால்கள் கிடக்கலாம். **************** கௌரவப்படுத்தவே இல்லையெனினும் புறா என்பதனையும் மறந்து காகங்களோடு காகங்களாய்க் கல்லைப் பொருக்கி குடுவையிலிட்டு நீரருந்த முயற்சிப்பேன். புறாக்களோடு புறாவாய் வாழ்நிலத்தில் இரை எடுக்கும்போதே சிறுமைப் படுத்துகிறார்களெனில் சிறிதும் தயங்குவதில்லை மீண்டும் அந்நிலத்தில் பாதம் பதிக்க! […]...more3minPlay
September 03, 2025காந்தி கெளசல்யா கவிதைகள்1) பூப்பறித்தவாறே மகளோடு வீடியோ கால் வழமையாகிவிட்டது அவளுக்கு!!! மாத்திரைகளோடு உணவும் ஆகிவிட்டதா?? சம்பிரதாய விசாரிப்புகள்……. அடுத்தடுத்த அறைகளில் பேச ஏதுமற்று இரு வேறு உலகத்தில் புதைந்திருந்ததுண்டு!!! தூர தேசத்தில் மனம் பற்றிப் படர கொம்பற்று அலைக்கற்றையாக அலைமோதி அலை பேசுகிறது…. பக்கத்து வீட்டுக்காரி உதட்டுச்சாயத்தின் விமர்சனத்தை!! அம்மாவோடு விவாதிக்காமல் எப்படி?? என்ன சொன்னாலும் ம்ம்ம்…..கொட்ட வேண்டுமே?? அம்மாவாச்சே…. ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்… என்றே …. ஒலி ஒளியான மகளை உணரத் துடிக்கிறாள் கடலும்…. நிலமும்…. மலையும் …..காற்றும்…. நீலமாய் […]...more3minPlay
September 03, 2025மேகலா கருப்பசாமி கவிதைகள்என் மழை மேக வானவில் நாலு கால் பாய்ச்சலில் வரும் டீ கடை பெஞ்சுகள் கனவின் விசித்திரம்; திரும்பிப் பார்த்துக் கொண்டே நடக்க யத்தனித்தால் ஏதேனும் ஒரு நினைவுச் சுவற்றின் மீது மோதிக்கொள்ளும் அபாயம் விளைவதால் கடிவாளமிட்ட குதிரையாய் பயணிக்கிறது மனம். நான் மாறியிருக்கிறேனா ? மாறாதது போலான மாயையில் சிக்கி நசுங்கி விட்டேனா? பரணில் துயில் கொள்ளும் பள்ளிப் புத்தகத்தை அவ்வப்போது தட்டி எழுப்பி கேட்கிறேன். உச்சி வெயிலில் உழன்று போன நாவின் தேடல் கண்ட […]...more3minPlay
September 03, 2025பட்டாம்பூச்சிகளின் மொழிபட்டாம்பூச்சிகளின் மொழி எப்படி இருக்கும்.. இமைகள் படபடக்கும் ஓசை போன்றா.. நினைவு சொல்லும் கதைகள் போன்றா.. இலையுதிர் காலத்தைப் போன்றா.. ம்ம்.. பட்டாம்பூச்சிகளின் கண்ணீர் எப்படி இருக்கும்.. சிறு காத்திருத்தலைப் போன்றா.. ஒரு கைவிடுதலைப் போன்றா.. பேசப்படாத கடைசி வார்த்தையைப் போன்றா.. ம்ம்.. பட்டாம்பூச்சிகளின் மௌனம் எப்படி இருக்கும்.. நாளைக்கென்று ஒத்திவைத்த மன்னிப்பு போன்றா.. மறைத்துவைத்த பாவத்தைப் போன்றா.. அழிந்துபோன ராஜ்ஜியத்தைப் போன்றா.. ம்ம்.. பட்டாம்பூச்சிகளின் பயம் எப்படி இருக்கும்.. அறிந்தே சொன்ன பொய்யைப் போன்றா.. மீண்டும் […]...more2minPlay
September 03, 2025மையச் சுழற்சியின் மாண்புகள்.நியூட்டன் அறியாத நிஜ வினை. அவர்கள் விரும்பிக் கொடுத்ததை ஊர வைத்து அரைத்து உறங்கி எழுந்து லாவகமாக சுட்டெடுத்து போட்ட பொழுது முகம் மாறுகிறார்கள் சுடுகிறதென. சொற்களுக்கும் சூடும் உண்டு சொரணையும் உண்டென்பதை மறந்து. *** தருணப் புரிதல். அந்த திரைச்சீலை அசைந்திருக்கக்கூடாது. அந்தக் காற்று கொஞ்சம் அவசரப்பட்டிருக்கக் கூடாது. நான் நிமிர்ந்திருக்கூடாது. அவர்கள் என்னை பார்த்திருக்கூடாது. நான் வானமாக வாகாகிக்கொண்டதை அறியாமல் பாவம் அவர்கள் நெருங்கும்பொழுதெல்லாம் புறாவைப்போல படபடக்கிறார்கள் சலனத்தில். அழகெனும் கற்பிதங்கள். செதுக்கிச் செப்பனிட்டு […]...more3minPlay
September 03, 2025முன்முடிவுகள்1. இனி எதுவுமில்லை நமக்கிடையே என்ற முன்முடிவினை அனுமதித்து வெவ்வேறாய் போன கணங்களை அசைபோடாத தனிமையில்லை. வசப்படாத காரணத்தை எங்கே என்று தேடுவது யாருடைய தவறென்ற தீர்மானத்தை தந்திடாத வழக்குகளில் எல்லாம் நிலுவையில் நிற்பது ஆழமாய் வைத்துவிட்ட அன்பு மட்டும் தானே. சாக்குகளை வாரியிறைத்து போக்கு காட்டும் உன் வற்றிப் போன அன்பிலிருந்து உயிர் காக்கும் அருமருந்தினை கைகளில் ஏந்திட காத்திருக்கும் நொடியில் தான் உன்னை சந்தித்திருக்கவே கூடாதென நினைக்கத் துவங்கினேன்.. 2. அந்தநாளில் நாம் பேசியிருக்க […]...more3minPlay
FAQs about Nutpam -Podcast:How many episodes does Nutpam -Podcast have?The podcast currently has 20 episodes available.