பொய்யின் சுவை அந்த வாழை மரத்தை நட்ட பிறகே பொய் சொல்ல ஆரம்பித்தேன் தினம் சொல்லும் பொய்க்கு ஏற்ப வளைய ஆரம்பித்தது வாழை மரம் முதலில் சிரிப்பை வரவழைக்க பொய் சொன்னேன். கேலி செய்யவும் மற்றவர்களைத் திருப்தி படுத்தவும் நான் திருப்தி அடையவும் மற்றவர்களைத் தப்பிக்க வைக்கவும் நான் தப்பித்துக் கொள்ளவும் என பொய்க்கான காரணங்கள் பெருகின பொய்களுக்குத் தக்கபடி பாம்பு போல வளைந்து வளைந்து வளர்ந்தது வாழை மரம் அதிசய வாழை மரம் என்று பார்த்தார்கள் […]