பட்டாம்பூச்சிகளின் மொழி எப்படி இருக்கும்.. இமைகள் படபடக்கும் ஓசை போன்றா.. நினைவு சொல்லும் கதைகள் போன்றா.. இலையுதிர் காலத்தைப் போன்றா.. ம்ம்.. பட்டாம்பூச்சிகளின் கண்ணீர் எப்படி இருக்கும்.. சிறு காத்திருத்தலைப் போன்றா.. ஒரு கைவிடுதலைப் போன்றா.. பேசப்படாத கடைசி வார்த்தையைப் போன்றா.. ம்ம்.. பட்டாம்பூச்சிகளின் மௌனம் எப்படி இருக்கும்.. நாளைக்கென்று ஒத்திவைத்த மன்னிப்பு போன்றா.. மறைத்துவைத்த பாவத்தைப் போன்றா.. அழிந்துபோன ராஜ்ஜியத்தைப் போன்றா.. ம்ம்.. பட்டாம்பூச்சிகளின் பயம் எப்படி இருக்கும்.. அறிந்தே சொன்ன பொய்யைப் போன்றா.. மீண்டும் […]