1. யோசித்த மாத்திரத்தில் குரல் ஒலிக்கும் மாயம் எண்ணித் தரத்தெரியாத கன்னத்து எச்சில் முத்தங்கள் அடிக்கடி உண்டாகும் ஒத்த அலைவரிசையில் அடிக்கும் ஹைஃபை பார்ப்போமா என நினைக்கையில் திடீர் தரிசனம் தரும் நட்சத்திர மினுக்கல் முகம் ரசனை கூடிய அன்பின் கொஞ்சலாட்டங்கள் நிறைவின் உச்சாணிக்கொம்பேறிய ப்ரியம் இருந்தும் நினைக்கையில் எல்லாம் கண்ணீர் பெருகியோடும் நேசத்தை ஏன் பரிசளித்தீர் தேவ? 2. மகிழ்வுப்பொழுதின் அந்தியில் முந்தியில் வரைந்திட்ட ஜோடி ஓவியத்தில் காதலை முடிந்து வைத்திருந்ததாய் நினைத்துக் கொண்டிருப்பவளுக்கு இல்லையில்லையென […]