நியூட்டன் அறியாத நிஜ வினை. அவர்கள் விரும்பிக் கொடுத்ததை ஊர வைத்து அரைத்து உறங்கி எழுந்து லாவகமாக சுட்டெடுத்து போட்ட பொழுது முகம் மாறுகிறார்கள் சுடுகிறதென. சொற்களுக்கும் சூடும் உண்டு சொரணையும் உண்டென்பதை மறந்து. *** தருணப் புரிதல். அந்த திரைச்சீலை அசைந்திருக்கக்கூடாது. அந்தக் காற்று கொஞ்சம் அவசரப்பட்டிருக்கக் கூடாது. நான் நிமிர்ந்திருக்கூடாது. அவர்கள் என்னை பார்த்திருக்கூடாது. நான் வானமாக வாகாகிக்கொண்டதை அறியாமல் பாவம் அவர்கள் நெருங்கும்பொழுதெல்லாம் புறாவைப்போல படபடக்கிறார்கள் சலனத்தில். அழகெனும் கற்பிதங்கள். செதுக்கிச் செப்பனிட்டு […]