முன்பொரு வேட்டை இருந்தது இதற்கு மேல் என்ன செய்வது அடைபட்ட வாசலில் மீதமிருந்த சுவடு கனவில் தினந்தோறும் படிந்து மீள்கிறது வேறெப்போதோ மீளாமல் விடைபெற்ற பொழுதின் கண்ணில் துளைத்து போகிறதொரு பகல் பழைய கண் எனில் இரவின் புறவாசலில் காத்திருக்கவும் செய்வேன் ஒரு வீண் பழித்தலை இருவழி காரணங்களோடு புதைக்கும் புல்மேட்டில் புதிய மாடுகள் மேய்கின்றன பசியாறா மொழியைத் துவண்டிடச் செய்யும் இடைவெட்டு கட்டளைகளை காபந்து செய்வதற்காக ஒரு கள்ளத்துப்பாக்கியை நீட்டுகிறேன் என்னை நோக்கி சாவுக்கான புல்லட் […]