உங்களது வரையறை வட்டத்திற்குள் எல்லாம் ஆழ்ந்துறங்க முடியாது என் நிலம் என் வானம் என் தூக்கம் எனதே எனதான கனவு என் கனாவைக் காணவிட்டுக் கொஞ்சம் கவனமாக நடந்து செல்லுங்கள் தோராயமான உங்கள் வட்டத்திற்கு வெளியேகூட என் கால்கள் கிடக்கலாம். **************** கௌரவப்படுத்தவே இல்லையெனினும் புறா என்பதனையும் மறந்து காகங்களோடு காகங்களாய்க் கல்லைப் பொருக்கி குடுவையிலிட்டு நீரருந்த முயற்சிப்பேன். புறாக்களோடு புறாவாய் வாழ்நிலத்தில் இரை எடுக்கும்போதே சிறுமைப் படுத்துகிறார்களெனில் சிறிதும் தயங்குவதில்லை மீண்டும் அந்நிலத்தில் பாதம் பதிக்க! […]