1. இனி எதுவுமில்லை நமக்கிடையே என்ற முன்முடிவினை அனுமதித்து வெவ்வேறாய் போன கணங்களை அசைபோடாத தனிமையில்லை. வசப்படாத காரணத்தை எங்கே என்று தேடுவது யாருடைய தவறென்ற தீர்மானத்தை தந்திடாத வழக்குகளில் எல்லாம் நிலுவையில் நிற்பது ஆழமாய் வைத்துவிட்ட அன்பு மட்டும் தானே. சாக்குகளை வாரியிறைத்து போக்கு காட்டும் உன் வற்றிப் போன அன்பிலிருந்து உயிர் காக்கும் அருமருந்தினை கைகளில் ஏந்திட காத்திருக்கும் நொடியில் தான் உன்னை சந்தித்திருக்கவே கூடாதென நினைக்கத் துவங்கினேன்.. 2. அந்தநாளில் நாம் பேசியிருக்க […]