விரும்பியவர்களின்
அதே முகத்தை
பெற்று வந்திருக்கும் அவர்தம் குழந்தைகளை ஆசையாய் அள்ளிக்கொள்பவர்களிடம்
அழைத்து
பதிலேதும் பேசாமல்
குரலைமட்டும் கேட்டுவிட்டு அழைப்பைத் துண்டிப்பவர்களிடம்
தூரமாய் நின்று
கண்நிறைய பார்த்துவிட்டு திரும்பிச் செல்பவர்களிடம்
முதலாகத் தந்த
பரிசுப்பொருளை பத்திரமாக வைத்திருப்பவர்களிடம்
தனிமைக்காக
நினைவின் கனம் தாளாது கண்ணீரைத் தேக்கிக் காத்திருபவர்களிடம்
சென்று நிறுவிக் கொண்டிருக்காதீர்கள்
காதலென்றால்
வெறும் காமம்தானென!