கண்ணி சொல் முறைமை :
கண்ணி எனும் சொற் பொருள்
கண்ணில் பட வேண்டி நாளும்
கண்ணியம் கட்டுப்பாடுடன் அழகுறச் சொல்வோம் ;
கண்ணிமைக்குள் பகிர்ந்து கொள்ள விரும்புவோம்.
விரும்பிய அரும்பொருள் சொல் வழக்கம்
வரும், வரலாற்றில் தொகுக்க முடியும்;
தரும் வகையில் பண்டைத் தமிழினை,
ஊரும் பேரும் அறிந்து கொள்ளும்.
கொள் நினைவில், பழக்கத்தில் ஏற்றிடு ;
உள் நுழைய தடுமாறும் 'டண்'ணகரம்
தாள் தேர்வு மூலக் கொள்கையோடு
நாள் ஒன்றுக்கு தமிழ்சொல் அறிவோம்.
அறிந்து கொள்ளும் நுண்ணுயிர் உணர்வு
கறிவேப்பிலை போல் ஏற்க மறுத்தாலும்
நெறிமுறை தொகுப்பில் சீராக அமையும்
அறிவோம் "றன்"னகர 'கன்னி'மொழி வேறுபாடு.