கற்றலில் நிற்றல்:
ஏழை படும் பாடு நிலையறிந்தும்
வாழைக் கொண்டு போக்கிடு வீரோ!
கழைக் கூத்துப் பணியும் படிக்கட்டும்
உழைக்கச் சொல்லும் ஆய்வு அறிக்கை.
அலை மேலே செல்லும் வழி
நிலைப் போக்கு விளை யாட்டும்
தலை பகுதி தளமே தடம்
இலை தழைக்க செயல் படுவோம்.
நாளை நமதே என்றிடும் இயக்கம்
வாளைக் கொண்டு போரிடும் பயிற்சி
ஆளை நிலைக்கும் மந்திரக் கோலா!
தோள் பட்டை உழைப்பே நிறையும்.
இன்று செய்யும் செயல் திறன்
நன்றி உடன் பயன்படும் தகவல்
தொன்று தொட்ட பழக்கம் ஏற்பு
நன்றே கற்று நாள்படவே நாடும்.