அன்பருக்கு வணக்கம், இங்கே சொல்லப்படும் கதைகள் அனைத்தும் பெரும்பாலும் ஆங்கிலம் கலக்காமல், நடைமுறைத் தமிழில் தான் இருக்கும். சில இடங்களில் தூயத் தமிழிலும் இருக்கும். இதற்கு காரணம், குழந்தைகள் கதைகளைக் கேட்கும்போது நான் சொல்வதை மட்டுமே கேட்காமல், பெற்றோரிடம் புரியாத வார்த்தைகளை கேட்கவேண்டும் என்றும், கதையை பெற்றோர் வாயிலாகவும் குழந்தைகள் கேட்கவேண்டும் என்ற எண்ணத்தினால் தான். அதனால்.., என்னது இது குழந்தைகளுக்கு புரியாத வகையில் கதைகள் உள்ளது என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். நன்றி :)