zhaghaan

குறுந்தொகை - 000 - அறிமுகம் + கடவுள் வாழ்த்து


Listen Later

சங்கவிலக்கியத்தின் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகிய, அவற்றுள் காலத்தால் முந்தியது என்று கருதப்படும் பெருமைக்குரிய குறுந்தொகையின் பாடல்களை ஒவ்வொன்றாக இப்பதிவுகளின் மூலம் கற்போம்.

குறுந்தொகை 400 குறுகிய (4 - 8 அடிகள்) அகப்பாடல்களின் தொகுப்பு.

‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்பதைப் போலச் சிறியவாயினும் திட்ப நுட்பங்கள் செறிந்த பாடல்களைக் கொண்டு கற்போருக்குப் பலப்பல சுவைகளையும் இன்பங்களையும் வழங்கக் கூடிய சிறப்பையுடைய நூல் இது.

தமிழுக்கே உரிய ஐந்திணை மரபையும், அவற்றின் துறைகளையும், பாடல்களில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்குமான பொருளையும் குறைவுபடாமல் அதே நேரம் 5 நிமிடப் பதிவுகளாய் ஒவ்வொரு பாடலுக்கான பதிவையும் தர வேண்டும் என்பதே எம் நோக்கம்.

தமிழின் தலைசிறந்த இந்த நூலை எம்மோடு சேர்ந்து கற்க வருக வருக என உங்களை அன்போடு அழைக்கின்றோம்...

உங்கள் கருத்துகளை எங்களுடன் தவறாமல் தயங்காமல் பகிர்ந்துகொள்ளுங்கள்...

நன்றி

ழஃகான்

...more
View all episodesView all episodes
Download on the App Store

zhaghaanBy Zhaghaan Tamil Journal

  • 4.5
  • 4.5
  • 4.5
  • 4.5
  • 4.5

4.5

2 ratings