
Sign up to save your podcasts
Or


'ஜன நாயகன்' படம் ரிலீஸ் தொடர்பான விவகாரத்தில், மறு தணிக்கைக்கு படத்தை படக்குழு அனுப்பி இருக்கிறது. இதை அடுத்து ஜனநாயகன் படத்தை மறுதணிக்கை குழுவினர் இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் பார்க்க இருந்தனர். ஆனால் கமிட்டி உறுப்பினர் ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் ஜனநாயகன் படத்தை மறுதணிக்கை குழுவினர் இன்று பார்க்கவில்லை. இதை அடுத்து படம் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
இன்ஸ்டாகிராமில் நான் உங்கள் தேவா என்று பேச தொடங்கி 2 சிறுவர்கள் வைரலானார்கள். தற்போது இந்த சிறுவர்கள் பல திரை பிரபலங்களோடு இணைந்து ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில், நடிகர் பார்த்திபனுடன் இணைந்து அந்த சிறுவர்கள் ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளனர். இதை பார்த்திபன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் துபாய்க்கு செல்ல பார்த்திபனிடம் சிறுவர்கள் வழி கேட்கின்றனர். அதற்கு அவர் வெற்றிக்கொடி கட்டு பட பணியில் பதில் கூறுகிறார்.
குடும்பத் தலைவிகளின் சுமையை குறைப்பதே முதல் கடமை! - இ.பி.எஸ். மகளிர் தின வாழ்த்து
விஜய் மீது அவரது மனைவி சங்கீதா கூறிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகின. இந்த நிலையில், தன்னை நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதிக்க விஜய்க்கு உத்தரவிடக்கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விஜயின் மனைவி சங்கீதா புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
ஆளுநர் ஆர்.என். ரவியுடன் சந்திப்பு - மலர்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த மு.க. ஸ்டாலின்
From the publisher's feed

56 Listeners