Seyalmantram

பேரதிகாரம் வகிக்கும் பங்கு உயிரோட்டம் நீரதிகார பனியுருகும் தேரோட்டம்.


Listen Later

பேரதிகாரம்

பேரதிகாரம் வகிக்கும் பங்கு உயிரோட்டம்
நீரதிகார பனியுருகும் தேரோட்டம்.
🙏❤️❤️‍🩹
ஓரதிகாரமாக விரித்த தொகுதி வைப்பு
பேரதிகாரம் வகிக்கும் பங்கு பிறப்புரிமை
நீரதிகாரம் பனிக்கட்டி உருகிய உயிரோட்டம்
ஏரதிகாரம் மண்ணின் மனித தேரோட்டம்.
தேரோட்ட நடைமுறை வாழ்வியல் நோக்கு
ஆரோசை அமரோசை தமிழிசை ஒலிப்பு
ஓரோசை ஒருங்குகூடி நிற்கும் அறிவோசை
யாரோடும் பேசாது சேர்க்கும் பதிவு.
பதிவு 'ஆளத்தி' ஆலப்பண் பாடி
புதிய உறவு முறை வரலாறு
பதிவாக சிலம்பு புகழ் அழகுபட
பதிவில் காட்டாளத்தி நிறவாளத்தி பண்ணாளத்தி .
பண்ணிசை ஆளத்தி ஏற்ற இறக்கத்தில்
பண்பாட எடுத்து தொடுத்து முடிக்கும்
மண்ணும் நீரும் நிலமும் செழிக்கும்
பண்டைய குறிஞ்சிப் பண் புறநீர்மை(பூபாளம்).
புற நீரும் அகம் அழகாய்
உறவாட நண்பகலில் செந்துருத்தி பெயர்சூடி
வறண்ட நிலத்திலும் செவ்வழி பாடி
பெற வேண்டிய சூழலும் பண்ணத்தி.
பண்ணத்தி பாட்டிடை கலந்த பொருளில்
வண்ண களஞ்சியமாய் வரிவடிவ சொல்லோவியமாய்
பண்ணிசை பாடல் விருப்பமொடு சீரடியாய்
மண்ணிடை பணிதனில் இனிய நினைவகம்.
நினைவக செயல் செய்யும் உள்ளகம்
புனைந்த மெய் பெறும் அவை
உனை எனை கலந்த மரபுவழி
கனைமிகு செறிவு நிறை திரள்.
திரள் திரண்ட தொகுதி பகுதி
கரம் பிடித்து செழிக்கும் பகுப்பு
பரம்பொருள் எந்நாளும் சிறப்புறும்
மதிப்பீடு
சிரம் தாழ்த்தி வணங்கும் வாய்ப்பு.
வாய்ப்பு மெய்ம்மை ஏற்புடையவை நன்கமைந்து
வாயுற வாய்மொழி பேசும் பொழுது
பாயும் சொற்கள் தேடும் கணிப்பு
பாயுமொளியாய் பவனி வரும் காலத்தொடர்.

...more
View all episodesView all episodes
Download on the App Store

SeyalmantramBy Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy