தலைப்பு - சங்கநூல்.
நூல் - புறநானூறு.
பாடல் எண் : 2.
பாடியவர் - முரஞ்சியூர் முடிநாகராயர்.
பாடப்பட்டோர் - சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்.
திணை - பாடாண் திணை
துறை செவியறிவுறூஉ, வாழ்த்தியலுமாம்.
கோணம் : 1
ஐவர் = பஞ்ச பாண்டவர்
ஈர் ஐம்பதின்மர் = நூற்றுவர் = துரியோதனன் ஆதியர்
இந்த ஐவரும் நூற்றுவரும் போரிட்டுக்கொண்டபோது இந்தச் சேர அரசன் உதியன் பெருஞ்சோறு வழங்கினான்.
இதனால் இவன் பாரதப் போர் நிகழ்ந்த காலத்தவன்.
கோணம் : 2
ஐவர் = பஞ்சவர் = பாண்டியர்
நூற்றுவர் = சதகர்னர் (சதம் = நூறு)
பாண்டியர்க்கும் சதகர்ணியர்க்கும் நடந்த போரில் இருவரும் போர்க்களத்தில் மாண்டபோது இருபால் படையினருக்கும் பெருஞ்சோறு வழங்கிப் பேணினான்.