FARMACY ன் சார்பாக அன்பு வணக்கங்கள்.
இன்று நாம் காணப்போவது மூங்கில் அரிசி பற்றிய செய்திகளை,
மூங்கில் பூப்பதும், அதில் அரிசி விளைவதும் எப்போதோ ஒரு முறை நிகழும் அரிய நிகழ்வு. மூங்கில்கள் அதன் ஆயுள் முடியும் காலகட்டத்தில்தான் பூக்கின்றன. ஒரு முறை பூத்த பிறகு, விதைகளை உற்பத்தி செய்துவிட்டு அவை இறந்துவிடுகின்றன. விதைகளை உற்பத்தி செய்யும்போது அதிக ஆற்றல் தேவைப்படுவதால், அதற்குப் பிறகு மூங்கில் இறந்துவிடுகிறது என்பது சில ஆய்வாளர்கள் கருத்து.
மூங்கில் நெல் என்று ஒன்று இருக்கிறது. அது 60 வருடங்கள் முன் வரை தமிழகத்தில் விளைந்ததாகவும் பின்னர் விடுபட்டு அண்மையில் மீண்டும் விளைவிக்கப்பட்டதாகவும் ஒரு செய்தி உண்டு.
உடம்பை இரும்பாக்கும் உன்னதத்தைத் தன்னகத்தே கொண்டு நோய் தீர்க்கும் மூங்கிலரிசியை முறையாய் சாப்பிட்டு வளமுற வாழ வேண்டும் என்பதே சித்தர்களின் ஆசையாகும்.
மூங்கிலிலிருந்து பெறப்படும் மூங்கிலரிசியைச் சமைத்து உண்டு வர,உடல் திடம் உண்டாகும், உடல் இறுகும்.
கொடிய நோய்களெல்லாம் நெடுந்தூரம் ஓடிவிடும்.
சர்க்கரை நோயால் கட்டான உடலை இழந்து சக்கையாகிப் போனவர்களை மறுபடியும் சீரான உடலமைப்பை பெறச் செய்யும் உன்னதமே மூங்கிலரிசியாகும்.
மூங்கிலரிசியை வெண்பொங்கல் போலவும் அல்லது பாயசம் போலவும் செய்து சாப்பிடலாம்.
மூங்கிலரிசி, தினையரிசி, சாலாமிசிரி ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் எடுத்து சேர்த்து அரைத்து தூள் செய்து கொள்ளவும். இதில் இரண்டு தேக்கரண்டி எடுத்து கஞ்சிபோல் செய்து சாப்பிட்டு வர தேகமெல்லாம் வலுவடையும். வஜ்ரம்போல் இறுகும். சர்க்கரை நோய் கட்டுப்படும்.
*மூங்கில் அரிசியின் நன்மைகள்:*
1. அரிசி மற்றும் கோதுமை இரண்டையும் விட அதிக புரத உள்ளடக்கம்.
2. மூட்டு வலி, முதுகுவலி மற்றும் வாத வலியைக் கட்டுப்படுத்துகிறது.
3. கொழுப்பின் அளவைக் குறைக்கிறது
4. வைட்டமின் பி 6 நிறைந்தது.
5. நீரிழிவு நோயை எதிர்க்கும் பண்புகளைக் கொண்டுள்ளது.
6. பெண்களின் மாதவிடாய் கோளாறுகள், ஆஸ்துமா போன்ற நோய்கள் குணமாகின்றது.
7. உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பது, கொலஸ்ட்ரால் அளவை குறைப்பது, சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவது போன்ற பணிகளையும் மூங்கில் அரிசி செவ்வனே செய்கிறது.
8. கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் விட்டமின் குறைபாட்டை போக்கும் தன்மையுள்ளதால் அக்கால கட்டத்தில் பெண்கள் விரும்பும் வகையிலான மூங்கில் அரிசி உணவுகளை செய்து சாப்பிட செய்யலாம்.
இதுவரை, மூங்கில் அரிசியின் இயல்பு மற்றும் நன்மைகளை கண்டோம். நாளை மற்றுமொரு அரிசி பற்றிய தகவல்களை விரிவாக காண்போம்.