*தினம் ஒரு அரிசி*
*தூயமல்லி*
தூயமல்லி (Thuyamalli) பாரம்பரிய நெல் வகைகளில் வித்தியாசமானதாக கருதப்படும் இந்நெல் இரகம், வெள்ளை கலந்த மஞ்சள் நிறமாகவும், தூய்மையாகவும் காணப்படுகின்றது. பாரம்பரிய நெல் வகைகளில் முதன்மை இடத்தைப் பிடித்துள்ள இந்த தூயமல்லி நெல்லின் அரிசி, வெள்ளை நிறம் கொண்ட மிக சன்ன இரகமாக உள்ளது. தமிழ்நாட்டை ஆண்ட குறுநில மன்னர்கள் தூயமல்லி அரிசியை மிகவும் விரும்பி சாப்பிட்டதுடன், இந்த நெல் இரகத்தைப் பயிர் செய்ய உழவர்களுக்கு ஊக்கமளித்துள்ளனர்.
தூயமல்லி எனப்படும் இந்நெல் இரகம், மக்களின் பலதரப்பட்ட எதிர்பார்ப்புகளையும் ஈடேற்றும் தன்மை கொண்டது. இந்த நெல்லின் அரிசி மட்டுமல்லாது தவிடும், சத்து மிகுந்து காணப்படுகிறது. அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட இது, பலகார வகைகளுக்கும் பழைய சாதத்துக்கும் ஏற்ற இரகம் உகந்ததாகவும், மற்றும் இதன் நீராகாரம் இளநீர் போன்று சுவையைத் தரக்கூடியதாகவும் கருதப்படுகிறது.
இந்த தூயமல்லி நெல்லை சாகுபடி செய்து அதிக மகசூல் எடுக்க, அக்காலத்தில் உழவர்களிடையே போட்டிகளை நடத்தி பரிசுகளும் வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
*மருத்துவ பயன்கள்:*
1. இந்த அரிசி நரம்பு மண்டலத்தை காக்கிறது.
2. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு.
3. எளிய முறையில் சமைக்கவும் மற்றும் செரிமான கோளாறு அற்ற ஒன்றாகும்.
4. சரும சுருக்கம் குறைக்கிறது, மற்றும் ஆரோக்கியம் மேம்படும்.
5. உடல் வளர்ச்சிக்கு மற்றும் மனவளர்ச்சிக்கு மேம்படும்.
6. உடலில் உள்ள உள் உறுப்புகளின் இளமை காக்கின்றது.
*Rice for the Day*
*Thuyamalli*
Thuyamalli is a variety of traditional paddy that is considered to be white, yellow and pure. The rice of this pure coriander rice, which is one of the foremost traditional rice varieties, is a very thin variety with a white color. The short-lived kings who ruled Tamil Nadu loved to eat pure coriander rice and encouraged farmers to cultivate this variety of paddy.
Duyamalli is a variety of rice that meets the diverse expectations of the people. This rice is not only rice but also bran and is rich in nutrients. It has high immunity, is considered to be suitable for many varieties and older varieties, and its juice can be tasted like ilaneer.
It is noteworthy that in order to cultivate this pure coriander paddy and get higher yields, competitions were held among the farmers at that time and prizes were given.
*Medical benefits:*
1. This rice protects the nervous system.
2. Diet suitable for diabetics.
3. Cook in a simple way and one without digestive disorder.
4. Reduces skin wrinkles, and improves health.
5. Improves physical growth and mental development.
6. Preserves the youth of the internal organs in the body.