*தினம் ஒரு அரிசி*
*கருடன் சம்பா*
பாரம்பரிய நெல் வகைகளில் எல்லாத் தரப்பினரும் உணவுக்காகத் தேர்ந்தெடுக்கும் முதன்மையான நெல் வகை கருடன் சம்பா. கருடன் கழுகுக்குக் கழுத்தில் வெள்ளையாக இருப்பதுபோல், கருடன் சம்பா நெல்லின் நுனிப் பகுதியில் வட்டமான வெள்ளை நிறம் இருக்கும். வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களைத் தாங்கி வளரக்கூடியது.
சாப்பாட்டுக்கும், பலகாரங்களுக்கும் ஏற்ற ரகமாகக் கருதப்படுகிறது. ஒரு காலத்தில் மணப்பாறை முறுக்கு இந்த அரிசியைக் கொண்டு செய்யப்பட்டுப் பிரபலமடைந்ததாகத் தகவல் உள்ளது. சீக்கிரமே வேகக்கூடிய ரகமாக இருப்பதால் பாரம்பரிய அரிசி வகைகளில் இல்லத்தரசிகளிடம் முதன்மை பெற்றது கருடன் சம்பா.
பாரம்பரிய நெல்லில் வரலாற்று சிறப்புமிக்க இந்த ரகம், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டம் முடிகொண்டான் கிராமத்தில் குழந்தைவேலுடையார் என்ற பண்ணையார் உருவாக்கியது. 1911-ம் ஆண்டில் கருடன் சம்பா நெல்லைக் கொண்டு ஒற்றை நெல் சாகுபடி முறையில் அவர் சாகுபடி செய்துள்ளார். அப்போது அவர் நடவு செய்தபோது கேலி செய்தவர்கள், பின்பு பயிரைப் பார்த்து மிரண்டு போனதாகச் சொல்லப்படுகிறது.
1. நோய் எதிர்ப்பு சக்தி ஏற்றது.
2. ஆரோக்கியமான உணவு/சாப்பாடு மற்றும் சிற்றுண்டி ஏற்றது.
3. பசையம் மிக குறைவான உள்ள அரிசி வகைகளில் இதுவும் ஒன்று மேலும் உடல் வலிமையாக்க உதவும்.
4. சிறுநீர் தொற்று எனப்படும் (urinary track infection) உபாதைகளை சீர் செய்ய உதவும்
5. உடல் கட்டிகளை (Body Tumors) குணமாக்க உதவும்.
6. ரத்த சோகை குறைபாடு உள்ளவர்களுக்கு ஏற்ற உணவாககும்.
*Rice for the Day*
*Garudan Samba*
*Garudan Samba* is the primary rice variety of choice for all parties. Garudan samba has a rounded white color at the tip of the paddy, just as the Garuda eagle has a white neck. Can withstand natural disasters such as drought and floods. It is considered to be suitable for food and snacks. It is said that "Manapparai Murukku" was once made with this rice and became popular. Garudan samba is one of the most popular traditional rice varieties among housewives as it is a fast-growing variety.
This variety, which is historically significant in traditional paddy, was developed by a farmer named Kulantaiveludaiyar in Mudikondan village, Kallakurichi circle, Villupuram district. In 1911 he started cultivating samba paddy with Garu in a single paddy cultivation system. It is said that those who mocked him when he planted, then looked at the crop and were shocked.
1. Suitable for immunity.
2. Suitable for healthy food / meal and snacks.
3. It is one of the rice varieties which is very low in gluten which also helps in strengthening the body.
4. Helps to correct urinary track infection
5. Helps to heal body tumors.
6. It is a suitable food for people with anemia.