Seyalmantram

Seyalmantram

By Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with AcademyEducationLanguage Learning
Download on the App Store

Seyalmantram episodes

  • 70,000ஆண்டுகளுக்கு முன்பு விதைகளை அறிந்த காலம் எனலாம்.

    70,000ஆண்டுகளுக்கு முன்பு விதைகளை அறிந்த காலம் எனலாம்.


    ஒரு நொடி பா

    ‘விதையே நிலைக்கும்.’ 
    விதை ஊன்றிய வேரின் தொடர்பு
    கதை நிலைக்கும் தொடர்.
    வேர் ஊன்றி விதைகள் வரும்
         பார்த்து பழகிய காட்சிகள் பல
    ஓர் பங்கு பரந்த வெளியில் 
         ஊர் எங்கும் உணவு முறை. 
    முறையின் இலக்கில் வரலாற்று பதிப்பு 
         மறை பொருளின் விளங்கும் தன்மை 
    அறை கூவல் மரபு வழி 
        உறைவிட இருப்பிடம் குடிமக்களின் குறியீடு

    குறியீடு புரத உணவு மூலம் 
        அறிகுறிகள் யாதென அறிந்த சமையல் 
    பறித்து உண்ணும் பழக்கம் கனிகாய்கள் 
       ஊறிய குடிநீரை குடிக்கும் குடியானவன். 

    குடியிருப்பு தங்கும் வீடு ஆடை
          படிப்பினை மக்கள் ஆற்றலின் தொடர்பு
    தடித்த தசை தரச் சைகை 
    படித்து கை காட்டிய வரம்பு. 

    11 min
  • 73,000 ஆண்டுகளுக்கு முன்பு ஓவியங்களின் காலம் எனலாம்.


    73,000 ஆண்டுகளுக்கு முன்பு ஓவியங்களின் காலம் எனலாம்.

    73, 000 ஆண்டுகளுக்கு முன்பு தொடக்க கால ஓவியங்களின் காலம் எனலாம்.

    ‘முகவை’ எனும் கரந்துறை சொல் ஆக
    படம் வரைதலுக்கு பயன்படுத்தலாம்.

    ‘முன்பு கண்டுபிடித்த வையககுறிகள்’
    என கரந்துறை சொல்லினில் கூறலாம் .
    குறுக்கு கோடுகள் வரைந்து முதன் முதலில் வரையும் ஓவியம் எனலாம்.
    படம் ஓவியமாக வரைந்த தொடக்க காலம் எனக் கூறலாம்.

    தென்னாப்பிரிக்காவின் ப்ளோம்போஸ் குகையில் கண்டுபிடித்த வந்த ஒரு கல் துண்டில் உள்ள குறுக்கு வெட்டு கோடுகள் காணப்பட்டன.
    தென்‌ ஆப்பிரிக்காவில் (தெ.ஆ)
    கலைப் பொருட்கள் பல கண்டுபிடித்தனர்.

    தொடக்க கால மனிதர்கள் முன்னர் நினைத்ததை விட குறைந்தது 30,000 ஆண்டுகளுக்கு முன்பே குறியீட்டு வடிவமைப்புகளை உருவாக்கிக் கொண்டிருந்ததைக் குறிக்கிறது.
    (இயற்கை ஆங்கில நாளிதழ்)

    கலைப்பொருள்:
    ஒன்பது சிவப்பு கோடுகள் பொறிக்கப்பட்ட
    ஒரு சிறிய மணற் கலவை கொண்டதாகும் .
    தென்னாப்பிரிக்காவில் ஒரு தொடக்க கால மனித இனங்களைக் குறிக்கும்.

    நுண்ணோக்கி கருவியில் வேதியியல்
    பகுப்பாய்வு மூலம் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது
    இந்த வரைபடம் வெவ்வேறு நுட்பங்களைப் பயன்படுத்தி
    (வரைதல் vs வேலைப்பாடு) மற்றும் ஊடகங்கள்
    (பாறை vs மணற்காரைத் துண்டுகள்) பயன்படுத்தி
    ஓத்த சுருக்க வடிவங்களை உருவாக்கிய
    ஓர் அடையாளம் ஆக திகழ்கிறது.
    இது ஒரு குறியீட்டு அமைப்பு மற்றும்
    சிக்கலான அறிவாற்றல் திறன்களைக் குறிக்கிறது.

    சிவப்பு காவிப் பூச்சு: ப்ளோம்போஸ் குகையில் கிடைத்த இந்த மணிகள் சிவப்பு காவிப் பூச்சுடன் காணப்பட்ட,
    ஒரு நிறமி ஆகும், அக்காலத்தில் நிறங்களுக்கான மூலப்பொருளாகப் பயன்படுத்தப்பட்டது. இது, மணிகளுக்கு வண்ணமளித்து, அவற்றின் தோற்றத்தை மேம்படுத்தும் நோக்கத்திற்காகப் பூசப்பட்டிருக்கலாம்.

    சூழல்:
    பொறிக்கப்பட்ட பல்வேறு நிறத்தில் மூடப்பட்ட ஓடு மணிகள் போன்ற பிற குறியீட்டு கலைப்பொருட்களை போலவே இந்த கண்டுபிடிப்பு அதே தொல்பொருள் அடுக்கில் செய்யப்பட்டது .
    ஒரு நொடி பா தொடரியல்.
    மணற் பாறைக்கல்லில் நிறைவு செய்யும்
    குணமே வண்ண ஓவியம்.

    காவிக்கல் கொண்ட கலைப்பொருள்
    பாவினம் நினைவில் நிறைவு செய்யும்
    தாவி பிடித்து கையகப் பொருளில்
    ஆவியில் வெந்த உணவக அறிவு.

    அறிவுசார் மனித இன நிறம்
    தறித்த நிலையறிந்த தொடர் நிலைப்பாடு
    வறியவர் நிலைப் பொருளின் இருப்பு
    கறிகாய் கனி வகைகள் பற்றிய பயிற்சி.

    பயிற்சி செய்யும் நினைவகத் தொடர்
    பயிர் வகைநிலை வையகச் சேர்க்கை
    மயிரிழையில் உயிர் மெய்‌ வளர்ப்பு
    பயிருக்கு தண்ணீர் விடும் படிமலர்ச்சி.

    படிப்படியாய் முன்னேறி வரும் நொடியும்
    நாடி பிடித்து அறிந்த மருத்துவ
    படிப்பு பணி மணி வரையறை
    நொடிப்பொழுது வாழ்வும் அறநெறி பாடும்.


    10 min
  • 75,000 ஆண்டுகளுக்கு முன்பு - தொடக்க கால நகை வணிக நடைமுறை

    75,000 ஆண்டுகளுக்கு முன்பு - தொடக்க கால நகை வணிக நடைமுறை75, 000 ஆண்டுகளுக்கு முன்பு தொடக்க கால நகை வணிக நடைமுறை முறுக்கப்பட்ட கிளிஞ்சல் மணிகளின் வகை மாற்றங்கள் (ப்ளோம்போஸ் குகை, தென்னாப்பிரிக்கா)பழமையான நகைகள்: இதுவரை கண்டறியப்பட்ட பழமையான நகைகளில் சில, 75,000 ஆண்டுகளுக்கு முந்தைய கடற் நத்தை ஓடுகளால் செய்யப்பட்ட மணிகள் ஆகும். இவையே மனித வரலாற்றில் அடையாளத்திற்கான தொடக்க கால சான்றுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றன.ப்ளோம்போஸ் குகை: தென்னாப்பிரிக்காவின் தென் கடற்கரையில் அமைந்துள்ள ப்ளோம்போஸ் குகையில், சுமார் 75,000 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த, மெருகூட்டப்பட்ட மற்றும் துளையிடப்பட்ட கடல் நத்தை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளன.பொருட்களின் பயன்பாடு:அக்காலத்து நகைகள் எலும்பு, கல் மற்றும் பற்கள் போன்ற கிடைக்கக்கூடிய இயற்கைப் பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டன. ப்ளோம்போஸ் குகை மற்றும் முறுக்கப்பட்ட கிளிஞ்சல் மணிகள்கலை மற்றும் அடையாளங்கள்: ப்ளோம்போஸ் குகையில் காணப்பட்ட கிளிஞ்சல் மணிகள் வெறும் அலங்காரப் பொருட்கள் மட்டுமல்ல. அவை அடையாளப்படுத்துதல், சமூகத்தின் அங்கமாக இருத்தல், மற்றும் தொடர்பு கொள்ளுதல் போன்ற செயல்களுக்கும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். இந்த மணிகள் அணிபவர்களின் குழு அடையாளத்தைக் குறிப்பதாகவும் கருதப்படுகிறது.சிவப்பு காவிப் பூச்சு: ப்ளோம்போஸ் குகையில் கிடைத்த இந்த மணிகள் சிவப்பு காவிப் பூச்சுடன் காணப்பட்ட, ஒரு நிறமி ஆகும், அக்காலத்தில் நிறங்களுக்கான மூலப்பொருளாகப் பயன்படுத்தப்பட்டது. இது, மணிகளுக்கு வண்ணமளித்து, அவற்றின் தோற்றத்தை மேம்படுத்தும் நோக்கத்திற்காகப் பூசப்பட்டிருக்கலாம்.உருவாக்கும் நுட்பம்: மணிகளை உருவாக்குவதற்காக, நத்தை ஓடுகள் கவனமாகத் துளையிடப்பட்டு, பின்னர் ஒன்றாக இணைக்கப்பட்டு நெக்லஸ் அல்லது வளையலாக மாற்றப்பட்டன. இந்த நுட்பமான பணி, அக்கால மனிதர்களின் சிக்கலான சிந்தனை மற்றும் படைப்பாற்றல் திறனைக் காட்டுகிறது.கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவம்: ப்ளோம்போஸ் குகையில் கிடைத்த கலைப்பொருட்கள், மனிதர்களின் படைப்பாற்றல் மற்றும் சமூக நடத்தை குறித்த முந்தைய கருத்துக்களை மாற்றியமைக்க உதவியுள்ளன. இந்த கண்டுபிடிப்புகள், தற்கால மனிதனின் அறிவாற்றல் படிமலர்ச்சி நிலைபற்றிய முக்கியமான தகவல்களை வழங்கியுள்ளன. ஒரு நொடி பா தொடரியல் :தகைசால் முறை வாழ்வுத் தொடக்கம்வகைச் சார்பில் அடங்கும். தகைமை நேர்மை அறம் சார்ந்தவை     வகை பாடும் பாடலின் மூலம் குகை வாழ்வின் தொடங்கிய பின்      முகைத் (அரும்பு) திணை சமூகத் துறை. துறை யாவும் இலக்கினை நோக்கும்      பறை சாற்றி வழிபடும் முறை மறைபொருள் உருவாகி சேவை சேர்க்கை      உறைவிடம் ஆடை ஆபரணம் தொழில்நுட்பமே. தொழில் நுட்ப கலவை இலக்கில்  வழி வழியாய் மலரும் மரபினம் வழிகாட்டியத் தொடர்பு வடிவ வேலைவாய்ப்பு  ஊழியருடன்  உள்ளவை கருத்துக் கோவை. கோவை' 'கோ'ர்த்த 'வை'யகத் தொடரியல்      அவையே முறையான வாழ்வும் வாக்கும் இவையே உலகின் நிலைத் தொடர்      எவையென குறியிடும் மொழிப் பாங்கு.

    13 min

About Seyalmantram

From the publisher's feed

Tamil and English Language Values - தமிழ் ஆங்கில மொழி மூலம் இலக்கிய வரலாற்று பதிவுகள்.